Breaking News
Home / உலகம் / வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு

வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு

ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதன் தாக்கத்தின் விளைவால் வடக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான விகாரைகள் யுத்தத்திற்குப் பின்னர் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன.

தமிழர் பகுதிகள் மெல்லமெல்ல முழுங்கப்பட்டு, முற்றாக சிங்கள மயப்படுத்தப்படும் எச்சரிக்கைக்கான அபாய மணி அடிக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு, புலிகளின் தலைமையின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், சம பலமான பேச்சுக்கள் குறைந்து விட்டன, அல்லது அதற்கான இடமேயில்லாமல் போய்விட்டன என்னும் உண்மை மறுக்க முடியாதது.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ் மக்களின் பேரம் பேசும், சக்திகளும், அமைப்புக்களும், குழுக்களும் பிரிந்து தனித்து இயங்கின. இயங்கிக் கொண்டிருக்கின்றன என்னும் கசப்பான உண்மையை ஏற்றாக வேண்டும்.

இந்நிலையில் கனடா தமிழ் தேசியம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான இரண்டு சர்வதேச மாநாடு கனடாவின் ஒட்டாவாவில் கடந்த 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாடு ஆரம்பிப்பதில் பெரும் இடர்களும், அழுத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக Conservative பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் உற்ற நண்பனுமான Bob Saroya பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக இம் மாநாட்டுக்கான மண்டபம் பெற்றுக் கொள்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும், இதற்கான உதவியினையும், பக்கபலத்தினையும் Conservative பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் உற்ற நண்பனுமான Bob Saroya கொடுத்திருந்தார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய தாயகம் தொடர்பான தேசிய பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு காண்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை இலங்கையில் இன்னும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இது உலகத்திற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரமாக இருக்கின்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக படிக்க இங்கே அழுத்தவும்

இது தொடர்பில் நீண்ட காலமாக ஒருமித்த கூட்டங்களோ, ஆய்வுகளோ நடத்தப்படவில்லை. தற்போது Conservative பாராளுமன்ற உறுப்பினரின் உதவியோடும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், அரசியல் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், அமைப்பின் தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார்கள்.

ஈழம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும், தமிழ்த் தேசியத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தக் கூட்டத் தொடரை நடாத்த விடாமல் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடைசி நிமிடம் வரையும் கடும் அழுத்தங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டது.

எவ்வாறான வழிகளில் இதனை தடுக்க முடியுமோ அவ்வாறான வழிகளில் எல்லாம் தடுக்க முயற்சித்திருக்கிறது. எனினும், Conservative பாராளுமன்ற உறுப்பினரும் ஏற்பாட்டாளர்களின் விடமுயற்சியினால் வெற்றிகரமாக இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஈழப் பிரச்சினையில் பல்வேறு கட்ட அறிவியல்சார் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என மாநாட்டில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், அமைப்பின் தலைவர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமும் உருவாகியிருக்கிறது எனவும், இது போன்றதொரு, நிகழ்வுகள் அதற்கு முன்மாதிரியாக அமைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இலங்கை அரசாங்கம் வழமை போன்று தன்னுடைய அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. எனினும், அதற்கான பதிலடியைக் கொடுத்துக் கொண்டே நகர வேண்டிய தேவை ஈழ அமைப்புக்களுக்கும், புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் உண்டு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Check Also

முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலை நினைவேந்தல் ; மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி.!

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமது தார்மீக உரிமையான தனி நாடு கேட்டு அற வழியிலும், ஆயுத வழியிலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *