Breaking News
Home / இலங்கை / விறகு வெட்டச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி !

விறகு வெட்டச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி !

மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்தில் மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

51 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம். கந்தசாமி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு விறகுகளை வெட்டுவதற்காக மரம் ஒன்றின் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே வீழ்ந்ததில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *