Breaking News
Home / இலங்கை / விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்

விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்

மனோ கணேசன்

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது ‘தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது பொலொன்னறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சிவசப்பட்டு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘இன்றைய தேசிய நெருக்கடி ஜனாதிபதி சூசிறிசேன நேற்றைய ஐதேமு கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது உணர்ச்சிவசப்பட்டு தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் நாட்டுக்கு உரையாற்றிவிட்டு ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டுதனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன் எனவும் கூறினார் சூடமய’ என்று தனது உத்தியோகப்பூர்வ டுவீடர் தளத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி இன்று தெரிவித்துள்ளளார்.

இதுபற்றிய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள எம்பி மனோ கணேசன் இந்த கருத்தை ஜனாதிபதி கூறியபோது அந்த கலந்துரையாடலில் என்னுடன் எம்பீக்கள் சஜித் பிரேமதாச ராஜித சேனாரத்ன லக்ஸ்மன் கிரியெல்ல ரிஷாத் பதுதீன் ரவுப் ஹக்கீம் பழனி திகாம்பரம் கபீர் ஹாசிம் ரவி கருணாநாயக்க அகிலவிராஜ் காரியவசம் மலிக் சமரவிகிரமஇ கயந்த கருணாதிலக அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இருந்தார்கள் என்று கூறினார்.

Check Also

லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த லொறியின் உதவியாளர் ஒருவரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *