Breaking News
Home / இலங்கை / வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பெண்கள் கொழும்பில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த மூன்று பெண்கள் கொழும்பில் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து 3 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியான விசா இன்றி தங்கியிருந்த 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பெண்களும் 35 வயதுடைய சீன நாட்டவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Check Also

யாழில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல்; சண்டையைக் கண்டதும் குடல் தெறிக்க ஓட்டமெடுத்த பொலிஸ்..

யாழ் நகரில் குழு மோதல் ஒன்றைக் கண்ட போக்குவரத்துப் பொலிஸார் அவ்விடத்தைவிட்டு வேகமாக நழுவிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *