Breaking News
Home / முக்கியசெய்திகள் / ‘வெளியேறுங்கள்’ மட்டு மேயரின் உத்தரவால் தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள்

‘வெளியேறுங்கள்’ மட்டு மேயரின் உத்தரவால் தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள்

இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்வோரை புனிதர்கள் என்று கூறுவார்கள். அவ்வாறு இறந்த பின்பும் மக்கள் மனதில் இன்றும் வாழ்வோர் பலர் உள்ளனர்.

அந்த வகையில் தமிழ் மக்களுக்காக போராடி, அவர்களுக்காக உயிர்விட்ட பலரின் வரலாறுகளும் உண்டு. தமிழ் மக்கள் என்றும் அவர்களை மறக்க மாட்டார்கள். அவ்வாறு மறந்தால் அவர்களை தமிழர்கள் என்று கூறுவதற்கே வெட்கம்…

தமிழர்கள் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழ்கின்றார்கள். அவர்கள் மனதில் கடவுளாக வாழும் புனிதர்களில் அன்னை பூபதியும் ஒருவராவார்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவரே அன்னை பூபதி.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.

1988 மார்ச் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 1988 ஏப்பிரல் 19ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது. அன்றைய தினம் உயிர் நீத்தார் இந்த தாய்.

அன்னை பூபதியின் நினைவு தினம் நேற்று அனைத்து தமிழர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக தாயின் சமாதி அமைந்துள்ள மட்டக்களப்பு கல்லடி, நாவலடிக்கு பலர் சென்று தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவனும் ஏனைய உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதை கண்ட மாநகர மேயர் பொலிஸாருக்கு விடுத்த உத்தரவு அனைவராலும் பெரிதும் பேசப்படுகின்றது.

“அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம். எனவே தயவு செய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றி விட்டு வாருங்கள்” என்று மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து அனைதது பொலிஸாரும் அன்னை பூபதியின் நினைவிடத்திலிருந்து வெளியேறி வெளியில் நின்று தமது கடமைகளை செய்திருந்தார்கள்.

மேயரின் இந்த உத்தரவு தமிழ் மக்களுக்கும் புனிதத்தன்மை இருக்கின்றது, எங்கள் மனதிலும் தமிழ் உணர்வு இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.

Check Also

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *