Breaking News
Home / Blog / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தார். தொடர்ந்து நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் மாலை மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று பந்தக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுளினார்.

பின்னர் மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் எழுந்தருளி பந்தக்காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Check Also

இன்றைய அதிஷ்டசாலி நீங்களா?… இதோ உங்களது ராசிபலன்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *