Breaking News
Home / இந்தியா / 11 வயது சிறுமியை சீரழித்து கல்லால் அடித்து கொன்ற இளைஞன்

11 வயது சிறுமியை சீரழித்து கல்லால் அடித்து கொன்ற இளைஞன்

இந்தியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள போதி கிராமத்தில் கடந்த புதன்கிழமை(18) இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது சிறுமியை மணமகனின் நண்பர் சாகு, சொக்லேட் மற்றும் குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அருகிலிருந்த செங்கலை எடுத்து அடித்து கொன்றார். அதன் பின் யாருக்கும் தெரியாமல் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். சிறுமியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளர். சாகு சிறுமியை அழைத்துச் சென்றதை பார்த்த சிலர் அவரிடம் விசாரித்தனர்.

சாகு சட்டையில் இரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சாகுவை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதே போன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் திருமண நிகழ்ச்சியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். திருமண நிகழ்ச்சியில் தொடரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை கடந்த ஜனவரி 17 ஆம் திகதி இந்தியா காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியான ஆஷிபா, 8 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் வைத்து, மயக்க மருந்து கொடுத்து, கல்லால் அடித்து, கழுத்தை நெறித்து சிறுமி ஆஷிபா கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் சிறுமிகள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

Check Also

லண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது

தென்மேற்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *