Header Ads

Header Ads

பிரான்சில் த்ராப் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பொலிசார் - நடந்தது என்ன ?

இன்று காலை த்ராப்பில் (Trappes - Yvelines) RAID படையினரின், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. பரிசின் பயங்கரவாதத் தடைப்பிரிவின் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடாத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்செய்யில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிற்கோ, அல்லது சோம்ப்ஸ் எலிசேத் தாக்குதலிற்கும், இந்தக் கைது நடவடிக்கைக்கும் தொடர்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் உளவு மற்றும் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினரான DGSI (Direction générale de la sécurité Intérieure) வழங்கிய தகவலின் அடிப்படையில், DGSIயும், பயங்கரவாதத் தடைப்பிரிவினரும், கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து செய்த விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் இஸ்லாமியத் தீவிர மதவாதத்தின்பால் ஈர்க்கப்பட்டதுடன், கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவும் முயன்றுள்ளனர். இவர்களை உளவு பார்த்த DGSI முழுமையான தகவல்களைப் பெற்றுள்ளது.

No comments:

Powered by Blogger.