Header Ads

Header Ads

மோபைல் போனை எடுக்க போய் உயிரை விட்ட லண்டன் 19 வயது உதவி ஆசிரியர் !

காரை ஓட்டும் போது மோபைல் போனை பாவிக்க வேண்டாம் என்று, லண்டனில் பொலிசார் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளார்கள். மேலும் சட்ட திட்டங்களையும் கடுமையாக்கியுள்ளார்கள். ஆனால் அதனை பலர் பின்பற்றுவதாக இல்லை.  லண்டனில் மொகாரா என்னும் 19 வயது உதவி ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் காரை ஓட்டிச் சென்றுகொண்டு இருக்கும் வேளை, தனது மோபைல் போனை கையில் எடுக்க முற்பட்டுள்ளார். அது கீழே விழுந்துவிடவே அதனை எடுக்க குனிந்துள்ளார். ஆனால் எதிரே ஒரு பாரிய ரக் வண்டி வருவதை அவர் கவனிக்கவில்லை. இன் நிலையில் காரை அவர் எதிர் பக்கமாக ஓட்டிச் சென்று ரக் வண்டியோடு மோதியுள்ளார்.

இதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். எனவே வாகனத்தை ஓட்டும் போது மோபைல் போன் பாவிப்பதால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இதனை இனியாவது நாம் தடுப்போம். 

No comments:

Powered by Blogger.