Header Ads

Header Ads

கரைக்கு ஒதுங்கிய 50 அடி நீளமான கடல் வாழ் உயிரினம் - குழம்பும் விஞ்ஞானிகள்

இந்தோனேசிய ஏரி ஒன்றில் 50 அடி நீளமான கடல் வாழ் உயிரினம் ஒன்று இந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த ஏரி கடலோடு தொடர்புடையது என்றும். இந்த ஜந்து கடலில் உயிர் வாழ்ந்து இறுதியில் இறந்து கரையை அடைந்துள்ளது என்கிறார்கள். அதில் இருந்து கசியும் ரத்தம் குறித்த ஏரியின் ஒரு பகுதியை சிவப்பு நிறமாக மாற்றிவிட்டுள்ளது.

அது போக இதன் நீளம் சுமார் 50 அடி இருக்கும் என்கிறார்கள். இதனை எந்த வைக்குள் சேர்ப்பது என்று தெரியாது என்றும். இது போன்ற ஒரு கடல் வாழ் உயிரினத்தை தாம் இதுவரை கண்டது இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதனை ஆக்டோபஸ் அல்லது கணவாய் இனத்தோடு இணைத்து பார்க்க விஞ்ஞானிகள் முனைகிறார்கள். இருப்பினும் அதற்கான எந்த ஒரு விடையும் கிடைக்கவில்லை.

இதனால் இந்த ஜந்துவின் டி.என்.ஏ மாதிரியை எடுத்து பெரும் பரிசோதனையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள். 

No comments:

Powered by Blogger.