Header Ads

Header Ads

வவுனியாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

வவுனியாவில் இன்று பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெள்ளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த பழமைவாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்ப்படுத்தி சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் மரம் வெட்டி அகற்றப்பட்டது இந்த நிலையில், வவுனியா இலுப்பையடிச் சந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை.
கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை வவுனியாவில் இன்று பிற்பகல் முதல் பெய்த காற்றுடன் கூடிய மழையினால் வவுனியா மாவட்ட அலுவலகத்திற்குள் வெள்ளம் உட்புகுந்துள்ளது. இத்துடன் மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சவுக்கு மரணம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதனால் மாவட்டச் செயலகத்திற்குள் செல்லும் போக்குவரத்து பாதை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.