Header Ads

Header Ads

கிளிநொச்சியிலும் தொடங்கிட்டாங்களா...? பெண்கள் நால்வர் கைது...!

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த பாலியல் தொழில் செய்யும் நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் பாலியல் தொழில் செய்யும் நிலையம் ஒன்று இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான்யறாபக்ச அவர்களின் பணிப்பின் பெயரில், கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சனவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனையிடுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால் குறித்த வீட்டை தேடுதல் நடத்த/பார்வையிட, குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவைச் சட்டத்தில் அதற்கென தரப்பட்டவாறான தத்துவங்களை பிரயோகிக்கவும் கடமையை புரியவும் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சன அவர்களின் குழுவினருக்கு நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம் குறித்த குழுவினர் பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உறுதிப்படுத்தியதன் பின்னர் குறித்த குழு வீட்டை முற்றுகையிட்டு நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த பாலியல் தொழில் செய்யும் நிலையமானது கிளிநொச்சியில் பல மாத காலமாக இயங்கி வந்ததுடன் இதனை முடக்கும் முயற்சியில் கிளிநொச்சியில் உள்ள கல்வியியலாளர்கள், பொது அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை எடுத்ததற்கான பரிசு என ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.