Header Ads

Header Ads

கனடாவின் கிழக்கு பாகம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வெள்ளப்பெருக்கு?

கனடாவின் கிழக்கு பாகம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைகாரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழைகாரணமாக ரொறொன்ரோ நகரம் ரொறொன்ரோ ஐலன்டிற்கான படகு சேவைகளை ரத்து செய்துள்ளது.
மழை தொடர்நது பெய்வதால் ஏற்படும் வெள்ளம் காரணமாக படகு சேவைகள், டொன் வலி பார்க்வே ஆகிய பகுதிகள் ஆபத்தானவை என நகரம் எச்சரிக்கின்றது.
கனடாவின் பல பிராந்தியங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக- கியுபெக் உட்பட்ட-அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்வதால் டொன் வலி பார்க்வே வெள்ளிக்கிழமை பிற்பகல் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இயன்ற அளவு பிற்பகல் 3மணியளவில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் டவுன் ரவுன் பயணிகள் பொது போக்குவரத்தை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ரொறொன்ரோ ஐலன்டிற்கான படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அத்தியாவசிய தேவை கருதி வாட்ஸ் ஐலன்ட் படகு சேவை மட்டும் இடம் பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் மழை எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது. அத்துடன் இப்பிரதேசத்தில் சனிக்கிழமை வரை 50முதல் 90மில்லிமீற்றர்கள் வரையிலான மழை பெய்யும் எனவும் தெரிவித்தள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4மணியளவில் ரொறொன்ரோவில் 25-மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது. ஹமில்ரனில் 38.3-மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது.
பாரிய வெள்ளம் காரணமாக ரொறொன்ரோ ஐலன்டில் வெளியேற்றத்திற்கு அதிகாரிகள் ஆயத்தமாகின்றனர். படகு துறையான ஹன்லன் பொயின்ரில் 700-குடியிருப்பாளர்கள் வசிப்பதாகவும் அவர்கள் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
ஐலன்ட் பொது பாடசாலை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நெல்சன் மன்டெலா பார்க் பொது பாடசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்.
இது வரை வெள்ளத்தால் ஐலன்ட் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழை வலுப்பெற்றால் வெள்ளம் ஊடுருவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி வெள்ளிக்கிழமை CP24வில் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
வெள்ளம் அதிகரித்தால் பொது போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்படலாம்.
பல இடங்களில் மின்சாரம் சூடாக்கி, செயலிழந்துள்ளது.

No comments:

Powered by Blogger.