Header Ads

Header Ads

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கண்ணீரில் மண் அள்ளி வீசிய - நீதிமன்றம்

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
குறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 இற்கு இணக்க பதின் நான்கு நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வித்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு வினவிய பொழுது
குறித்த இடத்திலே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது எனவும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி தம்மால் அறிந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இசமாதானத்திற்கும் அமைத்திக்கும் பக்கம் ஏற்படாலாம் என சந்தேகித்து முல்லைத்தீவு பொலிசாரால் மேற்கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்;படாதவாறு நிகழ்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.