Header Ads

Header Ads

நடக்கக் கூடாத சம்பவம்!! கடும் அதிர்ச்சியில் வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சரிற்கும் இடையில் வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்த படங்களை ரஸ்யா வெளியிட்டுள்ளமை குறித்து அமெரிக்கா கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட படங்களை தனது அரசஊடகங்கள் வெளியிடுவதற்கு ரஸ்ய அரசாங்கம் அனுமதிக்கும் என எதிர்பார்க்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஸ்ய வெளிவிவகார அமைச்சரிற்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்த புகைப்படங்களை ரஸ்யாவின் டாஸ் செய்திச்சேவை வெளியிட்டுள்ளமை குறித்தே வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
2016 ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தின்போது ரஸ்யாவிற்கும் டிரம்பின் அதிகாரிகளுக்கும் மத்தியில் காணப்பட்ட தொடர்புகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவந்த எவ்பிஐ இயக்குநர் டிரம்பினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ள தருணத்தில் ரஸ்யாவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளமை வெள்ளை மாளிகையை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் மத்தியிலான சந்திப்பு குறித்த படங்களை வெள்ளை மாளிகை வெளியிடாத நிலையில் ரஸ்யா வெளியிட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளும் கடு;ம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் பொய்சொல்வதே ரஸ்யாவிற்கு உள்ள பெரிய பிரச்சினை என குறி;ப்பிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.