Header Ads

Header Ads

பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் - யாழில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கச்சார்வெளி சந்தியில் நேற்று நள்ளிரவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வானத்தில் பயணித்த பொலிஸாருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதி மக்களிடையே பதற்ற நிலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சம்பவ இடத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
கச்சார்வெளி பகுதியில் பாரிய சத்தம் கேட்டுள்ளது. போக்குவரத்து பொலிஸார் அந்த இடத்தை அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர் இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை சேதப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றயல் பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றன.
பெருமளவு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.