Header Ads

Header Ads

நாடகம் பிடிபட்டது: குடும்பமே ஜிகாடி தீவிரவாதிகள் என்ற உண்மை வெளியானது

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் தற்கொலை குண்டுதாரியாக மாறி, குண்டை வெடிக்கவைத்து 22 பேரைக் கொலை செய்த சல்மா அபிடீனியின் கும்பத்தாரை லிபியாவில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். பிரித்தானிய பொலிசார் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக லிபிய நாட்டு பொலிசார் அவர்களை கைதுசெய்தவேளை. கொலைக்கும் தமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும். அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி, நல்லபிள்ளை போல நடித்தார்கள் அவரது குடும்பத்தினர்.

சற்று முன்னர் பிரித்தானியாவில் இருந்து சென்ற அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்ய ஆரம்பித்த அதேவேளை, அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தபோது அங்கிருந்தும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ந்த பிரித்தானிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். காரணம் என்னவென்றால். மான்செஸ்டர் குண்டுதாரியோடு , பரிஸ் தாக்குதலாளி தொடர்பில் இருந்துள்ளார். அதுபோக சர்வதேச அளவில் அபிடீனிக்கு பல தொடர்புகள் இருந்துள்ளது. மேலும் அவரது சகோதரர் ஏற்கனவே அல்கைடாவில் இணைந்து பயிற்ச்சி எடுத்துள்ளார். அவர் லண்டனை தாக்க பாரிய திட்டம் ஒன்றை தீட்டி, அதற்கான ஆவணங்களையும் ரெடி செய்து வைத்திருந்த வேளையே அவர் திடீரென கைதாகியுள்ளார்.

அது மட்டுமல்ல அவரது அப்பாவும் ஒரு ஜிகாடி தீவிரவாதி தான் என்பதும் ஆதாரங்களோடு நிரூபனமாகியுள்ளது. இவர்கள் பிரித்தானிய பாஸ்போட் வைத்திருந்தாலும். லிபியாவில் தங்கி இருந்து , அங்கே அல்கைடா மற்றும் பல தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பை பேணி வந்துள்ளார்கள். அபிடீனியின் அப்பா பயங்கரவாதிகள் மத்தியில் ஒரு பெரும் புள்ளியாக இருக்கவேண்டும் என்று பிரித்தானிய பொலிசார் நம்புகிறார்கள். பிடிபட்ட உடனே இவர்கள் நடித்த நாடகம் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் பிரித்தானியா கொண்டு வந்து விசாரிக்க பொலிசார் நாட்டம் காட்டி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.