Header Ads

Header Ads

அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்­கான மயா­ன­மாக ஆப்­கா­னிஸ்தான் மாறும்' தலிபான் மிரட்டல் .!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்கா தொடர்ந்து போரில் ஈடு­படப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். இரா­ணுவ கட்­டளைத் தலை­வ­ராக நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை அவர் ஆற்­றிய முத­லா­வது உரையின் போதே இவ்­வாறு சூளு­ரைத்­துள்ளார். 


ஆப்­கா­னிஸ்­தானில் கடந்த 16 வருட கால­மாக அமெ­ரிக்கப் படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த நிலையில் அந்­நாட்­டி­லி­ருந்து அந்தப் படை­யி­னரை விரை­வாக வாபஸ் பெறு­வதால் ஏற்படக்கூடிய ஏற்­றுக் ­கொள்ள முடி­யாத விளை­வு­களை தவிர்க்க அந்­நாட்டில் அமெ­ரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடு­பட வேண்­டி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். அமெ­ரிக்கப் படை­யி­னரை வாபஸ் பெறு­வதால் ஏற்­படக் கூடிய இடை­வெ­ளியை அல்–கொய்தா, ஐ.எஸ். தீவி­ர­வாத குழு உள்­ள­டங்­க­லான தீவி­ர­வாத குழுக்கள் நிரப்ப முயற்­சிக்­கலாம் என அவர் பத­வி­யேற்­றது முதற் கொண்டு தெரி­வித்து வரு­கிறார். 


ஆப்­கா­னிஸ்­தா­னிலும் எல்லைப் பிராந்­தி­யத்­திலும் நாம் எதிர்­கொண்­டுள்ள அச்­சு­றுத்தல் பாரி­ய­தா­க­வுள்­ளது” என்று அவர் கூறினார். ஆனால் ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி வெற்றுக் காசோ­லை­யாக அமை­யாது எனத் தெரி­வித்த அவர், தான் தூர நாடு­க­ளுக்கு ஜன­நா­யகத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் அமெ­ரிக்­காவின் சொந்த பிர­தி­மையில் ஜன­நா­யகத்தைக் ஏற்­ப­டுத்­தவும் படை­யி­னரை அங்கு அனுப்பப் போவ­தில்லை எனவும் எச்­ச­ரித்­துள்ளார். “நாங்கள் நாட்டை மீளவும் கட்­டி­யெ­ழுப்பப் போவ­தில்லை. 


நாம் தீவி­ர­வா­தி­க­ளை கொல்லப் போகிறோம்" என அவர் வலி­யு­றுத்­தினார். இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்ப் தனது இந்த உரையில் ஆப்­கா­னுக்கு மேல­தி­க­மாக எத்­தனை அமெ­ரிக்கப் படை­யினர் அனுப்­பப்­ப­ட­வுள்­ளனர் என்ற தக­வலை வெளி­யி­ட­வில்லை. ஆனால் அமெ­ரிக்கப் பாது­காப்பு அமைப்­பான பென்­டகன் ஆப்­கா­னுக்கு 4,000 படை­யி­னரை அனுப்­பி­வைக்க சிபா­ரிசு செய்­துள்­ளது. இந்­நி­லையில் தலிபான் தீவி­ர­வா­திகள் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு வரும் அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்கு அந்­நாடு ஒரு மயா­ன­மாக அமையும் என நேற்று செவ்­வாய்க்­கி­ழமை எச்­ச­ரித்­துள்­ளனர். 


அமெ­ரிக்கா ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து தனது படை­யி­னரை வாபஸ் பெறா­விட்டால் இந்த நூற்­றாண்டின் அதி­கார சக்­தி­யா­க­வுள்ள அந்­நாட்­டிற்கு ஆப்­கா­னிஸ்தான் பிறிதொரு மயான பூமியாக மாறும்" என தலிபான் தீவிரவாதக்குழுவின் பேச்சாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் எச்சரித்துள்ளார். அமெரிக்கா போரைத் தொடர்வதை விடுத்து வெளியேறும் தந்திரோபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Powered by Blogger.