Breaking News
Home / Blog / 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி படையினர் வசம்: யாழில் 

3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி படையினர் வசம்: யாழில் 

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இன்னும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணி முப்படையினரின் வசமுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இராணுவத்தினர் வசமிருந்த 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்னும் 3ஆயிரத்து 500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட உள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், காணி விடுவிக்கப்படாதுள்ளமை குறித்து சர்வதேச ரீதியில் கரிசனை வெளியிடப்பட்டு வருகிறது.

அத்துடன், காணி விடுவிப்பு குறித்து தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *