லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை
லண்டனில் உள்ள மாக்ஸ் & ஸ்பென்ஸர் கடையில், பாத்ரூமுக்குள் சென்ற பெண் ஒருவரின் கைப் பை(பேர்ஸ்) காணமல் போயுள்ளது. வெறும் கைப் பை தானே என அவர் எண்ணி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டது பின்னர் எவ்வளவு பாரதூரமான விடையத்தில் கொண்டு போய் விட்டுள்ளது என்று பாருங்கள்.
பர்ஸ் காணமல் போனது வழமைபோல குறித்தபெண், தனது வங்கி மற்றும் கிரெடிட் காட் நிறுவனங்களுக்கு போன் செய்து அனைத்து பிளாஸ்டிக் அட்டைகளையும் நிறுத்திவிட்டார். ஆனால் பர்ஸை கொள்ளையடித்தவர்கள் வேறு விதமாக சிந்தித்துள்ளார்கள். குறித்த பெண் அன்றைய தினம் அக் கடையின் மேனேஜரை சந்தித்து, தனது பர்ஸ் காணமல் போனது தொடர்பாக முறைப்பாடு செய்துவிட்டு தான் சென்றிருக்கிறார். பின்னர் 2 நாட்கள் கழித்து, அக் கடையின் மேனேஜர் தொலைபேசி அழைப்பை விடுத்து உங்கள் பர்ஸ் கிடைத்துவிட்டது. கடையில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அப்பெண் மார்க் & ஸ்பென்சர் கடைக்குச் சென்று மேனேஜரை சந்தித்து தனது பர்ஸை தரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் நான் உங்களுக்கு போன் கால் எதனையும் செய்யவில்லையே ..உங்கள் பர்ஸை நாம் இதுவரை கண்டு பிடிக்கவே இல்லையே என்று கூறியுள்ளார். பெரும் வியப்போடு வீடு சென்ற பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை உடைத்து கள்வர்கள் அங்கே இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்பொழுது தான் அந்தப் பெண்ணுக்கு புரிந்தது, தன்னை கடைக்கு வரச் சொல்லி அழைத்தது அந்த கள்வர் தான் என்று.
அவரது பர்ஸில் உள்ள ஓட்டுனர் அடையாள அட்டை(லைசன்ஸ்) வைத்து, கள்வர்கள் அவரது வீட்டு முகவரியை தெரிந்து கொண்டார்கள். அவர் பர்ஸில் இருந்த BT பில்லை வைத்து அவரது வீட்டு நம்பரையும் அறிந்து கொண்டார்கள். இப்படி உங்களை பற்றிய ரகசியங்கள் அடங்கிய எந்தப் பொருட்களையும் வெளியே எடுத்துச் செல்வது மிக மிக ஆபத்தான விடையம் ஆகும். இவை தொலைந்தால் அசட்டையீனமாக இருந்துவிட வேண்டாம். சற்று கவனம் எடுங்கள். இது யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம். தமிழர்களே ஜாக்கிரதை !
No comments: