சட்டவிரோத மரம் வெட்டும் இடம் முற்றுகை மூவர் தப்பியோட்டம்
திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரப் பலகைகள் வெட்டும் இடம் ஒன்றினை இன்று முற்றுகையிட்டுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கே சட்ட விரோதமான முறையில் வெட்டி வைத்திருந்த 57 முதிரை மரக் குற்றிகள் மற்றும் 22 பலகைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியபுர காட்டுப் பகுதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்ட போதே இச் சட்ட விரோத மரம் வெட்டும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரை கண்டு மூவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை தப்பியோடியவர்களை கைது செய்யவுள்ளதாகவும், மரப்பலகைகள், முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன
No comments: