தே.அ.அட்டை இறுதி இலக்க நடைமுறை! யாழில் கடும்பிடிபிடிக்கும் பொலிஸ்!!
ஊரடங்கு தளர்த்தப்படும் வேளை மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க செயற்திட்டம் யாழ்ப்பாணம் மாநகரில் இன்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று வியாழக்கிழமை என்பதால் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 7 மற்றும் 8 ஆகியவற்றைக் கொண்டவர்கள் மட்டும் யாழ்ப்பாணம் மாநகரின் மத்திக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
ஏனையோர் நகரின் மத்திக்குள் செல்ல அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாநகர மத்தியின் பல்வேறு நுழைவாயில்களுக்கச் சென்று இந்த நடைமுறையை இறுக்கமாகப் பின்பற்ற பொலிஸாருக்குப் பணித்தார்.
இதனால் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பொருள்களை ஏற்றி இறக்கும் வாடகை சேவையில் ஈடுபடும் படி வாகனங்களின் சாரதிகள் உள்ளிட்ட நாளாந்த வருமானம் ஈட்டுபவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
மேலும் நாளை வெள்ளிக்கிழமை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதால் நாளை நடைமுறைப்படுத்தப்படவேண்டிய தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களான 9 மற்றும் 0 எண்களைக் கொண்டவர்கள் இன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர மத்திக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
No comments: