லண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்
லண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளருமான பிரதாபன் அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர். பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். பிரதாபன் அவர்கள் லண்டனில் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்திலும் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். எப்பொழுது அவர் கதவை தட்டினாலும், என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்யக் கூடியவர், என்று அனைவராலும் போற்றப்படும் ஒரு உன்னதமான மனிதரை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.
லண்டனில் சில வாரங்களுக்கு முன்னர் ஆனந்த நடேசன் மாஸ்டர் அவர்கள், கொரோனா தொற்று காரணமாக இறந்தார். இன்று பிரதாபன். இப்படி ஆழுமை மிக்க பலரை தமிழ் சமூகம் கொடிய கொரோனா வைரசால் இழந்து வருகிறது என்று தான் கூறவேண்டும். மறைந்த லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு. சுமார் 40 நாட்களாக போராடி வந்துள்ளார். மருத்துவர்கள் இயன்றவரை அவரை காக்க அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்கள். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார்.
இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் மற்றும் நண்பர்களுக்கும் வன்னி மீடியா இணையம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்னார் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கிறது.
No comments: