கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை! சாதித்துக்காட்டிய முல்லைத்தீவு மாணவிகள்
போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
குறித்த மாணவிகள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள் ஆவார்கள்.
நடந்தது முடிந்த 2019 கல்வி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை மாணவிகள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது சக்கர நாற்காலிகளுடன் சென்று, கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதனை நிருபித்துள்ளனர்
1.தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து தனது வாழ்க்கையை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருபவர்.
2.நாவலர் வீதி முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த மதியழகன் விதுர்சிகா இவர் கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தில் தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து இன்று வரை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது கல்வியை இடையில் விட்டுவிடாது தொடர்ந்து படித்து க.பொ.த. சாதாரண தரத்தில் மிகவும் சிறப்பாக சித்தியடைந்துள்ளனர்
K.பவதாரணி- 8A,B, M.விதுர்ஷிகா- 6A,B,2C ஆகியோர் சிறந்த சித்திகளை பெற்றுள்ளானர்.
இவர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதேவேளை குறித்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
No comments: