இல்பேட்டில் 2 தமிழ் பிள்ளைகள் கொலை: தந்தை கொலை செய்தாரா ? பெரும் கூச்சல் கேட்டது
லண்டன் இல்பேட்டில் உள்ள விநாயகம் ஸ்ட்டோர் கடைக்கு மேல் வசித்துவந்த தம்பதிகளுக்கு இடையே நேற்று நடந்த வாக்கு வாதம் கொலையில் முடிந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. கடுமையாக கூச்சல் சத்தம் ஒன்று கேட்டதாகவும். இதனை தொடர்ந்து திடீரென நிசப்த்தமாகி பெரும் அமைதி நிலவியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் எதனையும் உறுதி செய்ய முடியவில்லை. விநாயகம் கடைக்கு மேல் வசித்து வந்த 40 வயது நபர் உயிருக்கு போராடிய நிலையில் தற்போது வைத்தியசாலையில் உள்ளார் என்று வன்னி மீடியா இணையம் அறிகிறது.
பிறந்து 1 வயதே ஆன பெண் குழந்தை, கத்திக் குத்து காரணமாக சம்பவ இடமான அல்பரோ வீதியில் இறந்துவிட்டார். 3 வயதான ஆண் குழந்தை சிகிச்சை பலன் இன்றி வைத்தியசாலையில் இறந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இக் கொலைகள் தொடர்பாக தாம் எவரையும் தேடவில்லை என்று இல்பேட் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் குறித்த 40 வயது உடைய நபர் மன நிலை சரியில்லாமல் இருந்ததாக அப்பகுதியில் வாழும் தமிழர் ஒருவர் வன்னி மீடியா இணையத்திற்கு தெரிவித்தார்.
இருப்பினும் முழுமையாக எந்த ஒரு செய்தியையும் தற்போது பெறமுடியவில்லை. வன்னி மீடியா இணையம் இல்பேட் பொலிசாரை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற முயற்ச்சி செய்து வருகிறது. எனவே அதுவரை வன்னி மீடியா இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.
No comments: