தலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன ?
சமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோபி. இதன் காரணத்தால் பல ஆயிரம் தமிழர்கள் கொதித்து எழுந்தார்கள். அரசியல் தலைவர்கள் விட்ட அறிக்கையாலும் சாதாரண தமிழர்களின் எழுச்சியினாலும், துல்கர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார். இதேவேளை துல்கரின் தயாரிப்பாளரான அனூப் சத்தியனது இணையத்தை(www.http://anoopsathyan.com/), முடக்கியுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை.
ஏன் எனில் anoopsathyan.com என்னும் இந்த இணையம் கடந்த 29.04.2020 அன்று தான் ரெஜிஸ்டரே செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசப்பற்று மிக்கவர்கள், இவருக்கு ஒரு பாடத்தை கற்பிக்கவே இவ்வாறு செய்துள்ளார்கள் என்பது புரிகிறது. இதில் இணைய வழி புலிகளின் பிரிவு, ஹக் செய்ததற்காக உரிமையைக் கோரியுள்ளார்கள். அட இந்த சினிமா விடையத்திற்கு போய் ஏன் அநாவசியமாக சிலர், உணர்சி வசப்படுகிறார்கள் என்று தமது கருத்துக்களை இன்ரர் நெட்டில் பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொண்டு இருப்பார்கள். அது என்னவென்றால் இது நாள் வரை பிரபாகரன் என்பவர் யார் என்று தெரியாத 18 வயது மலையாள பெடியன் கூட, என்று Who is Prabakaran என்று கூகுளில் தேடிப் பார்த்துள்ளான் என்பது தான்.
இது போக பல்லாயிரக்கணக்கான மலையாளிகள், யார் பிரபாகரன் என்று கூகுளில் தேடிப் பார்த்துள்ளார்கள். இதனால் தமிழனின் வரலாறு மீண்டும் ஒரு முறை உலகிற்கு தெரிந்துள்ளது. தெரியவில்லையா இன்னும் தேடிப் பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இது தாண்டா தமிழன் என்று மீண்டும் நாம் மார் தட்டி நிற்க்க, இந்த எழுச்சி உதவியுள்ளது என்றே கூறவேண்டும்.
No comments: