இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி!
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர் பலியாகி இருந்தனர் என சுகாதார மற்றும் சமூக நல துறை கூறியிருந்தது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்பொழுது, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 674 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய நாள் எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இதனால் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று 6 ஆயிரத்து 32 பேருக்கு புதிய பாதிப்புகளை பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.
No comments: