நித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்
லண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் தன்னையும் கடுமையாக கத்தியால் தாக்கியுள்ள நிலையில், வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்றும் மேலும் அறியப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக லண்டனில், லாக் டவுன் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் விசா இல்லாமல் இருக்கும் பலர் வேலை செய்ய முடியாது கஷ்டப்படுவதோடு, மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இவர்கள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள். லண்டனில் இயங்கும் கோவில்கள் பெரும் நிதியை வைத்திருக்கிறார்கள். கோவிகள் ஒன்றியம் இதுபோன்ற விசா இல்லாமல் வேலை செய்ய முடியாமல் அல்லாடும் தமிழர்களுக்கும். தமிழ் குடும்பங்களுக்கும் உணவுகளையாவது குறைந்த பட்சம் கொடுப்பது நல்லது. வாராந்தம் ஒரு சிறிய தொகையாவது கோவில்கள் கொடுக்கலாம். தமிழர்கள் தான் தமிழர்களுக்கு உதவவேண்டும். வானத்தில் இருந்து குதித்து வந்து ஒருவர் எமக்கு உதவப் போவது இல்லை.
No comments: