கொரோனா தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியர்! அவரது குழந்தையின் நிலை..
கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மேரி கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்தார். தொடர்ந்து அவர், வயிற்றில் இருந்த குழந்தை அறுவைசிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ செய்தி தொடர்பாளர் இதுகுறித்து “ குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஆனால், மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.
மேரி அகியேவா அகியாபோங் மேரியின் இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகிகள், அருமையான செவிலியரை இழந்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். மேரியின், கணவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடுபத்திற்கு நிதியளிக்க உடன்பணிபுரிபவர்கள், இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இதுவரை அதில், £4,500 சேர்ந்துள்ளது.

No comments: