Header Ads

Header Ads

பாகுபலி-2 – திரை விமர்சனம்

ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் கண் விழித்து காத்திருந்தது பாகுபலி-2 படம் எப்போது வரும் என்று தான். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனாவை ஏன் பல்வாள்தேவன் சிறை பிடித்தான், சிவகாமியை கொலை செய்ய சொன்னது ஏன்? என பல கேள்விகளுக்கு விடையாக இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது பாகுபலி-2. இப்படம் முதல் பாகத்தை மிஞ்சியதா? பார்ப்போம். கதைக்களம் முதல் பாகத்தை தொடர்ந்து சிவகாமி உத்தரவின் பேரில் பாகுபலி, கட்டப்பா நாட்டில் மக்களின் நிலையை அறிய ஊர் முழுவதும் சுற்றி வருகின்றனர். அப்போது தேவசேனாவின் (அனுஷ்கா) தைரியத்தை பார்த்த பாகுபலிக்கு காதல் பற்றிக்கொள்கின்றது.

நாட்டை பாகுபலியிடம் இழந்த பல்வாள்தேவனுக்கு தேவசேனா மீது காதல் என்பதை விட, பாகுபலியிடமிருந்து அவளை பிரிக்க எண்ணி சிவகாமியிடம் தேவசேனாவை தனக்கு திருமணம் செய்துக்கொடுக்குமாறு கேட்கின்றார். இதன் பிறகு சிவகாமி தேவசேனாவை தன் மகனுக்கு மனம் முடிக்க கேட்க, தேவசேனா கடும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றார். இதை தொடர்ந்து என்ன ஆகின்றது? கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுவாரசியத்தின் உச்சமாக ராஜமௌலி விஷ்வல் ட்ரீட் கொடுத்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல் முதன் முறையாக ஒட்டுமொத்த திரையுலகமும் ஓர் இயக்குனருக்காக படத்தை எதிர்ப்பார்க்கின்றது என்றால் அது ராஜமௌலியாக தான் இருக்க வேண்டும். தனி மனிதனாக 5 வருடம் இப்படத்தை செதுக்கியதற்காகவே எழுந்து நின்று பாராட்டலாம்.

முதல் பாகத்திலேயே பல பிரமாண்டங்கள் காட்ட, இதில் அதை மிஞ்ச வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் எந்த ஒரு இடத்திலும் பிரமாண்டத்தை திணிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை தான் எடுத்துள்ளார். கதாபாத்திரங்களின் அழுத்தம் முதல் பாகத்தை விட இதில் நன்றாக உள்ளது. மேலும், இதில் கட்டப்பா சத்யராஜ் முதல் பாகத்தில் அழுக்கு படிந்த முகம், அடிமை வாழ்க்கை என்று இருப்பார்.

ஆனால், இதில் கொஞ்சம் கலகலப்பாக காட்டப்பட்டுள்ளார். காமெடி ஒர்க் ஆகியுள்ளது, இருந்தாலும் ஏன் பாகுபலியை கொன்றார் அதை நாங்கள் சொல்ல முடியுமா? திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். பிரபாஸ் முழுவதுமாகவே தன்னை ராஜமௌலியிடம் ஒப்படைத்துவிட்டார். பாகுபலி, சிவுடு என இரண்டு கதாபாத்திரங்களிலும் கம்பீரமாக மிரட்டியுள்ளார்.

அதிலும் பல்வாள்தேவனிடம் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் அத்தனை கோபங்களையும் கண்களின் வழியே நம்மிடம் சேர்கின்றார். அனுஷ்கா முதல் பாகத்தில் வெறும் சங்கிலியால் மட்டுமே தான் கட்டப்பட்டு வருவார். ஆனால், இதில் ஹீரோவிற்கு நிகராக தூள் கிளப்பியுள்ளார். அட இதெல்லாம் எப்ப எடுத்த சீன், அனுஷ்கா இவ்வளவு அழகா என கேட்க வைக்கின்றது.

தற்போது தான் எடைப்போட்டுவிட்டார்), அதிலும், மகிழ்மதிக்குள் இவர் வரும் காட்சி சிலிர்க்க வைக்கின்றது. படத்தின் முதல் பாதி ’ஆ’ என்று அசர வைக்க, இடைவேளை மேலும் நம்மை வேறு லெவலுக்கு எடுத்து செல்கின்றது. அத்தனை எதிர்ப்பார்ப்புடன் இருக்க, இரண்டாம் பாதி ‘முதல் பாதி அளவிற்கு இல்லையே, என்ன கிளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லையே’ என்று நினைக்க வைக்கின்றது.

படத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராணா, பிரபாஸ் என மொத்த கலைஞர்களும் செமயாக நடித்துள்ளனர். க்ளாப்ஸ் படத்தின் விஷுவல் ட்ரீட் எல்லா நடிகர்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம். படத்தில் இடம்பெறும் மாடு சண்டை காட்சிகள். இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளை மிஸ் பண்ணவே கூடாது.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஒருசில இடங்களில் மிஸ்ஸிங்.

கிளைமேக்ஸ் காட்சியில் குறை கூற முடியாது,

இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருக்கலாம்.

ஒரு சில இடத்தில் லிப் சிங்க் சரியாக இல்லை. மொத்தத்தில் இந்திய சினிமாவே பெறுமை கொள்ளும் ஒரு படம்,

இந்த பிரம்மாண்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Powered by Blogger.