Header Ads

Header Ads

2017 தமிழ் சித்திரை புத்தாண்டு வருஷம் யார் யாருக்கு என்னவெல்லாம் செய்யும்,…

மேஷம்.
புத்தாண்டை வெற்றியோடு துவக்க உள்ளீர்கள். 2017ம் ஆண்டில் வரவு அதிகரிக்கும். வரவு இருந்தாலும் அவசர தேவைக்கு எடுத்து உபயோகிக்க இயலாது.
கண்ணுக்கு தெரியாத சேமிப்பாக உயருமே அன்றி, அன்றாட செலவுகளுக்கு உதவாது. இருப்பினும் மனோ தைரியம் கூடும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
அதே நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகளை தவிர்க்கவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்தால் காரியத்தில் கால தாமதம் இருந்தாலும் வெற்றி உண்டு.
வாக்குறுதிகளை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமையுணர்வை வளர்க்க பாடுபடுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தாயார் வழி உறவினர்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். அதனால் வருத்தம், ஆதங்கம் அதிகரிக்கும். இருப்பினும் எதையும் திடமாக யோசித்து தீர்க்கமாக முடிவு எடுப்பீர்கள். திடீர் விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். அவர்களுடனான சந்திப்பு நிம்மதி தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான சூழல் இருக்கும்.
எதிர்பார்த்த கடனுதவி தடையின்றி கிட்டும். இதர கடன்பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். ஜாமீன் பொறுப்பேற்பதோ, கியாரண்டி கையெழுத்து போடுவதோ கூடாது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். திருமணத்திற்காகக் காத்திருப்போர் இல்லங்களில் கெட்டிமேளம் கொட்டும். ஆன்மிக, தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரயாணத்தால் ஆதாயம் இருக்கும். ஆனால் பிரயாணத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
மாணவர்கள் ஞாபக மறதியை தவிர்க்க கூடுதல் எழுத்து, கூட்டு பயிற்சி நன்மை தரும். மருத்துவ துறையினர், சமையல் மற்றும் கட்டிட கலைஞர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும். உங்கள் பேச்சு மற்றவர்களால் தவறாக பொருள் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளதால்
பெண்கள் அளவோடு பேசுவது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் கணவரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுத்து செய்து வருவது உத்தமம். உடல்நிலையில் கவனம் அவசியம்.
தொழிலில் கூடுதல் முயற்சியால் மட்டுமே உங்களால் எதையும் சாதிக்க முடியும். ஏற்றுமதி, இறக்குமதி, இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம், சிமென்ட் போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றத்தை சந்திக்க நேரலாம். பண விவகாரங்களில் கூடுதல் கவனம், அண்டை அயலாருடன் எச்சரிக்கை கட்டாயம் தேவை. பொதுவாக இந்த வருடத்தில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகில் உள்ள சுப்ரமண்யர் ஆலயத்திற்கு சென்று சுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்து வருவது நல்லது. வருடப்பிறப்பு அன்று அநாதை சிறுவர்களுக்கு இயன்ற உதவி செய்யவும். நேரம் கிடைக்கும்போது திருத்தணி சென்று வள்ளி மணாளனை தரிசிக்கவும்.
ரிஷபம்
கண்டச்சனியின் காலம் ெதாடந்து கொண்டிருந்தாலும் பிறக்கப்போகும் 2017 புத்தாண்டு முழுவதும் உங்களது செயல்களில் சனியினால் தடையேதும் உண்டாகாது என்பதால் அதை நினைத்து கவலை கொள்ளத்தேவையில்லை. எடுத்த வேலைகளில் செயல்திறன் அதிகரிக்கும். முழு முயற்சியுடன் செயல்களை முடித்து வெற்றியும் நிம்மதியும் காண்பீர்கள். முக்கியமாக தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காண உள்ளீர்கள். நண்பர் ஒருவரோடு இணைந்து செய்யும் காரியங்கள் உங்களுடைய புகழை உயர்த்துவதோடு சிறப்பான லாபமும் பெற்று தரும். ஆனால் ஓய்வில்லாமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
சொந்தபந்தங்களுடனான உறவில் உள்ள விரிசலை களைய முற்படுவீர்கள். நிலுவையில் உள்ள உறவினர் வழி பிரச்னைகள் சுமுக முடிவிற்கு வரும். உடன்பிறந்த சகோதரர்களுக்கு இடையே புதிய பிரச்னைகள் துளிர்விடும் என்பதால் மிகவும் பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்படுவது கட்டாயம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது எச்சரிக்கை தேவை. நீங்கள் மிகவும் நெருங்கிய நபர் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடும். வாகனங்களை மாற்றவும், புதிய வாகனங்கள் வாங்கவும் நேரம் கனிந்து வரும். வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மனநிலையில் கூடுதல் கவனம் அவசியம்.
குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகவும், தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. நண்பர்களோடு விவாதத்தை தவிர்க்கவும். மருத்துவச் செலவுகள் இருக்கும். உடல்நிலையில் தோன்றும் சிறுபிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கிரியாதிகளை கட்டாயம் செய்வது அவசியம். அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர் துணையுடன் பொதுக்காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களின் கல்வி மேம்பட சனி பகவான் துணையிருப்பார். எழுத்து வேகத்தினை மேம்படுத்தி கொள்வது அவசியம்.
பெண்கள் தெய்வ நம்பிக்கையோடு குடும்பப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.
தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். கூட்டுத்தொழில், இயந்திரங்கள் சார்ந்த தொழிலில் லாபம் உண்டு. வருடத்தின் முற்பகுதியில் சுபசெலவுகளுக்கான வாய்ப்பு உண்டு. எதிலும் புன்னகையுடன் கூடிய செயல்பாடு கட்டாய வெற்றி தரும். பொதுவாக உழைப்பினால் உயர்வு காண வேண்டிய ஆண்டாக அமையும்.
பரிகாரம்: மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருப்பது, கிருத்திகை நட்சத்திர நாளில் சுதர்ஸனர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும். கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.
மிதுனம்
கண்டச்சனியின் காலம் ெதாடந்து கொண்டிருந்தாலும் பிறக்கப்போகும் 2017 புத்தாண்டு முழுவதும் உங்களது செயல்களில் சனியினால் தடையேதும் உண்டாகாது என்பதால் அதை நினைத்து கவலை கொள்ளத்தேவையில்லை. எடுத்த வேலைகளில் செயல்திறன் அதிகரிக்கும். முழு முயற்சியுடன் செயல்களை முடித்து வெற்றியும் நிம்மதியும் காண்பீர்கள். முக்கியமாக தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் காண உள்ளீர்கள். நண்பர் ஒருவரோடு இணைந்து செய்யும் காரியங்கள் உங்களுடைய புகழை உயர்த்துவதோடு சிறப்பான லாபமும் பெற்று தரும். ஆனால் ஓய்வில்லாமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
சொந்தபந்தங்களுடனான உறவில் உள்ள விரிசலை களைய முற்படுவீர்கள். நிலுவையில் உள்ள உறவினர் வழி பிரச்னைகள் சுமுக முடிவிற்கு வரும். உடன்பிறந்த சகோதரர்களுக்கு இடையே புதிய பிரச்னைகள் துளிர்விடும் என்பதால் மிகவும் பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்படுவது கட்டாயம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது எச்சரிக்கை தேவை. நீங்கள் மிகவும் நெருங்கிய நபர் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடும். வாகனங்களை மாற்றவும், புதிய வாகனங்கள் வாங்கவும் நேரம் கனிந்து வரும். வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மனநிலையில் கூடுதல் கவனம் அவசியம்.
குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகவும், தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. நண்பர்களோடு விவாதத்தை தவிர்க்கவும். மருத்துவச் செலவுகள் இருக்கும். உடல்நிலையில் தோன்றும் சிறுபிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கிரியாதிகளை கட்டாயம் செய்வது அவசியம். அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர் துணையுடன் பொதுக்காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களின் கல்வி மேம்பட சனி பகவான் துணையிருப்பார். எழுத்து வேகத்தினை மேம்படுத்தி கொள்வது அவசியம்.
பெண்கள் தெய்வ நம்பிக்கையோடு குடும்பப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.
தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். கூட்டுத்தொழில், இயந்திரங்கள் சார்ந்த தொழிலில் லாபம் உண்டு. வருடத்தின் முற்பகுதியில் சுபசெலவுகளுக்கான வாய்ப்பு உண்டு. எதிலும் புன்னகையுடன் கூடிய செயல்பாடு கட்டாய வெற்றி தரும். பொதுவாக உழைப்பினால் உயர்வு காண வேண்டிய ஆண்டாக அமையும்.
பரிகாரம்: மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருப்பது, கிருத்திகை நட்சத்திர நாளில் சுதர்ஸனர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும். கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.
கடகம்
கால நேரம் தவறாது கடமையை செய்து வரும் உங்களுக்கு 2017ம் ஆண்டு நிறைய அனுபவ பாடங்கள் கற்று தரும். கடந்த சில வருடங்களாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை நாளுக்கு நாள் கூடும் என்பதால் அவ்வப்போதைய பணிகளை காலம் தாழ்த்தாது உடனுக்குடன் முடித்து விடுவது நல்லது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் சமாளிக்க இயலாத அளவிற்கு கடுமையாக பணிச்சுமை கூடிவிடும். ஜூலை மாதம் 27ம் தேதி முதல் ஜென்ம ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் இடம் பெற உள்ளதால் முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களை விட்டு பிரிதல், உடல்நலக்குறைவு, நற்பெயருக்கு களங்கம், போன்ற சிரமங்களை மனோதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
புதிய சொத்து வாங்குதல், சேமிப்புகளில் ஈடுபடுதல் போன்றவற்றை வருட முற்பாதியிலேயே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க வேண்டிய வாய்ப்பு தோன்றலாம். விரக்தி இருக்கும். எதிலும் வாழ்க்கைத்துணை உங்களுக்கு துணை இருப்பார். பூர்வீக சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். உடன்பிறந்தோருடன் இணைந்து குடும்பப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டு. ஞாபகமறதியால் இழப்புகள் இருக்கும். அவற்றை தவிர்க்க அன்றாட பணிகளை கட்டாயம் எழுதி வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. பொருட்கள் வாங்கும் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. பணம் சம்பந்தமான முக்கிய விவகாரங்களுக்கு தனித்து செயல்படுவதை தவிர்த்து நம்பிக்கையானவர்களின் துணையை உடன் வைத்து கொண்டு செயல்படுவது இழப்புகளை தவிர்க்கும். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பது கூடாது. உறவினர்கள் வருகையால் செலவுகள் கூடினாலும் மகிழ்ச்சி இருக்கும். பிரயாணத்தில் ஆர்வம் கூடும். பிள்ளைகளின் வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. சம்பந்தமில்லாத விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது அவசியம்.
மாணவர்களுக்கு கல்வியில் இடைஞ்சல்கள் இருக்கும். கூடுதல் எழுத்துப்பயிற்சி அவசியம்.
பெண்கள் பணவிவகாரங்களில் தனித்து செயல்படுவது கூடாது. அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்வது கூடாது. பேச்சில் கவனம் உத்தமம். அமைதி காப்பது நலம். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை உருவாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஞாபகமறதியால் அவதி இருக்கும். சிறுதொழில் செய்வோருக்கு கூடுதல் உழைப்பும் குறைந்த லாபமும் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய நுணுக்கங்களை புகுத்தினால் வெற்றி காண்பார்கள். பொதுவாக சில சிரமங்கள் இருந்தாலும் விடாமுயற்சியும் மன உறுதியும் அதிகரித்து உங்களை ஊக்குவிக்கும்.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும். பிரதி மாதம் பவுர்ணமி நாளில் விரதம் இருந்து அம்பிகையை அர்ச்சனை செய்து வழிபடவும். முடிந்தால் அன்னதானம் செய்யலாம். நேரம் கிடைக்கும் போது மதுரை மீனாக்ஷி அம்மன் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்வது கூடுதல் நன்மை பயக்கும்.
சிம்மம்
அர்த்தாஷடம் சனியின் தாக்கத்தோடு 2017ம் ஆண்டை எதிர்கொள்ள உள்ளீர்கள். இருப்பினும் குருபகவான் அருளால் கவலைகள் காணாமல் போகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வீர்கள். உறவினர்கள் வழியில் பிரச்னைகள் உருவாகும். நல்லது என்று நீங்கள் ஒன்று சொல்ல போக அது அடுத்தவர்கள் கண்களுக்கு தவறான வழிகாட்டுதல் அல்லது அறிவுரை என்று தோன்றும் என்பதால் முற்றிலும் அடுத்தவர்களக்கு அறிவுரை சொல்வதை தவிர்க்கவும். அதுமட்டுமின்றி அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது அவசியம்.
நெருங்கிய நபர் ஒருவருக்கு இக்கட்டான சூழலில் உதவி செய்ய இயலாமல் தர்ம சங்கடமான சூழலை எதிர்கொள்ள நேரும். ஏப்ரல், மே மாதங்களில் தொழிலில் இடமாற்றம் இருக்கும். பொருளாதார நிலையில் இழப்பு ஏதும் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும். வருமானத்தை அசையா சொத்துகளாக மாற்றிக் கொள்வது நல்லது. சொத்துகளை வாங்கும் பொருட்டு கடன் பட நேர்ந்தாலும் கவலைபடாதீர்கள். வீடு, வண்டி, வாகனம், மனை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
சொத்துக்களை வாங்கும் பொருட்டு கவனம் தேவை. உங்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும் நேரம் இது. எதிர்காலத்திலும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் படியான பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் ெபறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். அவர்களது எதிர்காலம் சிறக்க சில முன்னேற்பாடுகள் செய்வது நல்லது. தொடர்பணிச்சுமையால் ஓய்வெடுக்க இயலாது போகும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். வீண் குழப்பத்தால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். நெருக்கமான நபர் ஒருவரால் ஏமாற்றபடும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் கல்வியில் இடைஞ்சல்களை சந்திக்க நேரும். தேர்வின் போது கூடுதல் கவனம் அவசியம். கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதும் நல்லது.
பெண்கள் கூடுதல் கவனத்துடன் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது கட்டாயம். குடும்ப விவகாரங்களை கணவர் துணையுடன் அணுகுவது நலம். சொத்து விவகாரங்களில் இணைந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக எச்சரிக்கை அவசியம்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி நகைகள், வாசனாதி திரவியங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ெசய்வோருக்கு லாபம் கிடைக்கும். சங்கடங்கள் இருந்தாலும் கவலை கொள்ள தேவையில்லை. எச்சூழலிலும் பாதை மாறாத நேர்மையான செயல்பாட்டின் மூலம் நற்பெயரோடு உங்கள் லட்சியத்தினையும் அடைவீர்கள். பொதுவாக சனியின் தாக்கம் இருந்தாலும் குருபகவான் அருளால் அவற்றை தகர்த்து எடுத்த செயல்களில் எந்த சூழலிலும் பாதை மாறாமல் நேர்மையான செயல்பாட்டால் எதிர்பார்த்த வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று சிவாலயத்தில் வழிபட்டு, இயன்ற அன்னதானம் செய்யுங்கள். அவ்வப்போது தக்ஷிணாமூர்த்தியை தரிசிக்கலாம். பவுர்ணமி தோறும் திருவண்ணாமலை கிரிவலம் அல்லது 11முறை சிவாலய பிரதக்ஷிணம் செய்து கூடுதல் நிம்மதி காணலாம்.
கன்னி
ஜென்ம ராசியில் குருபகவான் சஞ்சார நிலையோடு 2017 புத்தாண்டை துவக்க உள்ள உங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. வலிமையான ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இந்த வருடம் நிச்சயம் பிரபல்ய யோகம் அடைவார்கள். இந்த புத்தாண்டு பரவலாக நன்மை தந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும். வாழ்க்கையில் இதுநாள் வரை கண்டுணர்ந்த அனுபவத்தால் செய்யும் செயல்களில் நிதானமும், பக்குவமும் கூடுதலாக வெளிப்படும். சுய உழைப்பால் உயர்வு பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். படபடப்பை தவிர்க்கவும். நான்கு பேர் மத்தியில் உங்களது விவேகமான செயல்பாடுகளால் உங்கள் பெருமை, கவுரவம் மேலும் அதிகரிக்கும்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுநாள் வரை உண்மையாக உழைத்து வந்ததன் பலனை இந்த ஆண்டில் அனுபவிக்க உள்ளீர்கள். நெடுநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரவு வந்து சேரும். சொத்து சேர்க்கையில் ஈடுபடுவதற்கு சரியான சந்தர்ப்பம் அமையும். பேச்சில் நிதானம் இருக்கும். அதிகம் பேசாமல் அளந்து பேசி நற்பெயர் காண்பீர்கள். அடுத்தவர்கள் அறிவுரையை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருவோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் எடுத்த பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்வர்.
புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. மிகவும் நெருங்கிய நபர் ஒருவரின் குடும்பத்திற்காக தியாகங்கள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலமும், சோதனைகளும் இருக்கும். தகப்பனார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வாகன மாற்றம் செய்ய நினைப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். திட்டமிட்ட ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். வாழ்க்கைத்துணையின் பணிகளில் உங்களது ஆலோசனைகள் உதவியாக அமையும். பிள்ளைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம்.
புதிய தோழிகளால் உலக அனுபவங்கள் கூடும். ஜீவன ஸ்தானம் வலிமையாக உள்ளதால் பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அனைவருக்குமே அவர்கள் செய்து வரும் தொழில் சிறக்கும். ஆதாயம் கிடைக்கும். மற்ற படி ஜாதக ரீதியான பலன்களுக்கு ஏற்ப இருக்கும். எப்படியும் மிகப்பெரிய லாபத்தை காண இயலாவிட்டாலும் நேரத்திற்கு தகுந்தாற் போல வியாபார யுக்தியை மாற்றிகொண்டு செயல்பட்டு வெற்றி பெறவேண்டியிருக்கும்.
வியாபாரிகள் புதிய யுக்தியால் வெற்றி காண்பார்கள். உணவுப் பொருட்கள் வியாபாரம், குளிர்பான விற்பனை, தோல்பொருட்கள் ஏற்றுமதி, செல்போன், சிம்கார்டு விற்பனை ஆகியவை முன்னேற்றம் காணும். புத்தாண்டில் எதிர்பார்த்தபடி வாழ்க்கை தரம் முன்னேற்றம் காணும். எதிர்பார்த்தவை வெற்றியாக முடியுமாதலால் முழுமையான திருப்தியுடன் வாழ்க்கையை அனுபவிக்க உள்ளீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது சத்தியமங்கலம் அருகில் உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடவும்.
துலாம்
2017ம் வருடத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். வருடத்தின் முற்பாதியில் குரு பகவானின் சாதகமற்ற சஞ்சார நிலைஇருப்பதால் எளிதில் முடிந்து விடும் என்று நினைத்த காரியங்கள் இழுபறியான நிலையில் இருக்கும். ஆயினும் செப்டம்பர் 2ம் தேதி முதல் குருபகவான் ஜென்ம ராசியில் இடம் பெயரும் காலத்தில் உங்கள் தேவைகள், விரும்பிய காரியங்கள் நடைபெறும். தொழில் போட்டிகள் அகலும். உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்த நபர்கள் தானாக விலகிச் செல்வார்கள்.
மனதை தத்துவ சிந்தனைகள் ஆக்கிரமிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் உண்டு. பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். உடன்பிறந்தோருடன் இணைந்து பூர்வீக சொத்து பிரச்னைகளில் முக்கியத்தீர்வு காண்பீர்கள். முக்கியமான பணிகளில் உங்களுடைய புதிய திட்டங்கள் வெற்றி பெறும். பிரச்னைக்குரிய காலங்களில் நிதானமான அணுகுமுறையால் நற்பெயரோடு வெற்றியையும் பெறுவீர்கள். நெடுநாட்களாக எண்ணியிருந்த முக்கிய காரியம் ஒன்று நடைபெறும். வாகனங்களை இயக்கும்போதும் பயணிக்கும்போதும் அதிக எச்சரிக்கை அவசியம்.
பிள்ளைகளின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். அவர்களின் வாழ்வில் சுபநிகழ்வுகள் நடைபெறத் துவங்கும். கடன் பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். மறைமுக எதிரிகள் வலுவிழப்பார்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவது அவசியம். பிரச்னைகளை அவரோடு அமர்ந்து ஆலோசித்து தீர்வு காண்பது நல்லது. எதிலும் மற்றவர்களோடு அனுசரித்துச் சென்றால் வெற்றி நிச்சயம். பிரச்னைக்குரிய நேரத்தில் மாற்று மதத்தை சார்ந்த நண்பர்கள் துணை நிற்பார்கள்.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. அயராது உழைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியும். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஃபேஷன் டெக்னாலஜி, கேடரிங் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ட் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முக்கியப் பங்காற்றுவீர்கள்.
தொழில், உத்யோகம், அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிட்டும். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், வாகனங்களை வாங்கி விற்பவர்கள், கட்டிடக்கலை, அழகுக்கலை, சமையல் கலை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பொதுவாக இவ்வருடம் வாழ்க்கையில் புதிய திருப்புமுனையை தோற்றுவிக்கும். வாழ்வினில் முன்னேற்றம் காணும் வருடம் இது.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று சிவாலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்வது நல்லது. அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு, பிரதி வெள்ளி தோறும் சிவாலயத்தில் அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு இவற்றால் நன்மைகள் கூடும். சங்கரன்கோவில் தலத்திற்கு சென்று கோமதியம்மன் உடனுறை சங்கரநாராயணரை தரிசிக்கவும்.
விருச்சிகம்
2017ம் ஆண்டின் துவக்கமே உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். நினைத்த காரியத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது உங்களின் எண்ணங்களை நிறைவேற்றும். சனி பகவானின் ஜென்ம சஞ்சார நிலையும் உங்களுக்கு சாதகமான பலன்களைப் பெற்றுத் தரும். திட்டமிடுதலின் மூலம் வெற்றி கண்டு வருவீர்கள். கொண்ட லட்சியத்தை அடையும் வரை விடாமுயற்சியுடன் செயல்படுவீிர்கள். நெடுநாட்களாக மனதில் இருந்த கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறும். ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு சிலருக்கு தொழில் முறையில் அந்நிய தேசத்திற்கு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மனதில் தத்துவ சிந்தனைகள், இரக்க குணம், தியாகம் இடம்பிடிக்கும். தெளிவான சிந்தனை மற்றும் கருத்துகள் மூலம் நற்பெயர் காண்பீர்கள். உங்களது ஆலோசனையின்படி செயல்படுபவர்கள் சிறப்பான வெற்றி காண்பார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களை விவேகத்துடன் கையாள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு கூடும். சூதாட்டங்கள் போன்ற விஷயங்களில் மனம் லயிக்கும். வீண் விரயத்தை சந்திக்க வேண்டியுள்ளதால் மனதை கட்டுப்படுத்துவது நல்லது.
தாயார் வழி உறவினர்களால் பொருளாதார ரீதியான பிரச்னைகள் வரும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உதவி கேட்டு வரும் உறவினர்களுக்கு உதவி செய்ய இயலாமல் போகும். மிகவும் நெருக்கமான நபர் ஒருவரோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும். பிள்ளைகளின் உடல், மன நிலையில் கவனம் அவசியம். சில நேரத்தில் அவர்களது பிடிவாதமான செயல்கள் உங்களுக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்க கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி அவர்கள் பெயரில் புதிய சொத்துகளை வாங்க காலநேரம் சாதகமாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறை சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள்.
பெண்கள் ஏழரை சனியின் தாக்கத்தால் அவ்வப்போது குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளை சந்திக்க நேரலாம். ஆயினும் விவேகமான அணுகுமுறையினால் எளிதில் சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குவீர்கள். கணவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலில் அவரது ஆலோசனைகள் வெற்றி பெற்று தரும். அதே நேரத்தில் கணவர் வழி உறவினர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல.
உத்யோகஸ்தர்களுக்கு அவ்வப்போது தற்காலிக இடமாற்றம், கேம்ப், இன்ஸ்பெக்ஷன் என அலைச்சல் கூடும்.
ஸ்டேஷனரி, பத்திரிகை, இன்ஷ்யூரன்ஸ், தகவல்தொடர்பு, ஆட்டோமொபைல் தொழில்கள் முன்னேற்றம் தரும். பொதுவாக புத்தாண்டில் சாதக பாதகங்களை சமாளித்து வெற்றி காண உள்ளீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்கு சென்று சேவிப்பது நல்லது. இயலாதவர்கள் இருந்த இடத்திலிருந்தே பெருமாளை தியானிப்பதும், விஷ்ணு சஹஸ்ராம பாராயணம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருமலை திருப்பதி சென்று ஸ்ரீவேங்கடநாதனை சேவிக்க நினைத்த காரியம் கைகூடும்.
தனுசு
ஏழரை சனியின் தாக்கத்தோடு புத்தாண்டினை எதிர்கொள்ள உள்ளீர்கள். 2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை சற்று சிரமமான பலன்களை எதிர்கொள்ளும் நீங்கள் அதன் பின் குரு பகவானின் லாப ஸ்தான சஞ்சாரத்தால் சிரமங்கள் சற்று குறையக் காண்பீர்கள். வருடப்பிறப்பின்போது கிரஹங்களின் தலைவன் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலம் சேர்க்கும். சோதனைக்குரிய காலத்திலும் மிகவும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் செயல்படுவீர்கள். பிடிவாதத்தை விடுத்து விவேகத்துடன் காரியமாற்றுவது நல்லது.
பேச்சில் கடுமையை தவிர்க்கவும். முடிந்தால் அமைதி காப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். சிலருக்கு கையிருப்பு கரையும். குடும்பத்தில் அமைதி நிலவும். முன்பின் தெரியாதவர்களிடம் கூடுதல் கவனம் தேவை. உடன்பிறந்த சகோதரனால் தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடும். சகோதரியின் மூலம் நன்மை உண்டு. முக்கியமாக பண விவகாரங்களில் நிதானம் தேவை. அடுத்தவர்களுக்காக கடன் வாங்குதல், அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுதல், ஜாமீன் கொடுத்தலில் நிச்சயமாக ஈடுபடக்கூடாது.
வாழ்க்கைத்துணையின் உடல், மன நிலையில் அக்கறை தேைவ. வேலை பளுவோடு குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கும். எல்லாவற்றையும் சமாளிக்க உங்களை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எழுத்து வேகத்தை கூட்டிக்கொள்வது அவசியம். கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். வணிகவியல், பொருளாதாரம், கணக்கு பதிவியல் மற்றும் சட்டத் துறை மாணவர்கள் ஏற்றம் காண்பார்கள்.
பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் கூடும். எதிலும் அதிகம் பேசாது அமைதி காக்க வேண்டியது அவசியம். நீங்கள் பேச நினைப்பவற்றை வாழ்க்கைத்துணை மூலம் வெளிப்படுத்தி காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். பிரயாணம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் அந்நிய பெண்களிடம் அதிக எச்சரிக்கை அவசியம். வேலைப்பளுவால் ஓய்வற்ற சூழலை உணர்வீர்கள். இவ்வருடத்தில் தொழிலில் பெருத்த முன்னேற்றம் காண இயலாது.
உத்யோகஸ்தர்கள் அதீத பொறுமை காக்க வேண்டும். அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரலாம். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.
தொழிற்சாலைப் பணியாளர்கள் இயந்திரங்களில் பணியாற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் திறம் மிக்கவர்கள் தைரியம், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாருங்கள். நன்மை உண்டாகும்.
பரிகாரம்: பிரதி சனிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். செவ்வாய்தோறும் ராகு கால வேளையில் விளக்கேற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது மைசூருக்கு அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்குச் சென்று தேவியை தரிசிக்க மன நிம்மதி காண்பீர்கள்.
மகரம்
2017ம் ஆண்டின் துவக்கம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை தரும் வகையில் அமைந்துள்ளது. மனதில் ஸ்திரத்தன்மை உருவாகும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் நிலவும் கிரஹ சஞ்சார நிலை நீங்கள் நினைக்கும் காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் சாதகமான அம்சத்தில் உள்ளது. தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு எதிலும் வெற்றி பெற்று தரும். குடியிருக்கும் வீட்டில் மாறுதல் செய்ய முற்படுவீர்கள். பூர்விக ஸ்தானத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இந்த வருடத்தில் தனது சொந்த ஊர் திரும்புவார்கள். சிரமமான சூழ்நிலையிலும் வரவு தொடரும்.
தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது சம்பாத்யத்தினை குறைப்பது போல் தோன்றினாலும் மறைமுகப் பொருள் வரவு தொடரும். அதே நேரத்தில் வரவிற்கேற்ற செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். சொகுசான வாழ்விற்காக ஆடம்பர செலவுகளில் அதிக நாட்டம் செல்லும். குடும்பத்தில் சலசலப்பான நிலை தொடரும். விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாது உறுதியாக இருப்பீர்கள். சில விஷயங்களில் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்கி வெற்றி காண முயற்சிப்பீர்கள். உங்கள் ஆலோசனைகளை அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அதனை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பீர்கள்.
தெளிவு மற்றும் அதிகாரமான பேச்சால் உங்கள் கவுரவம், மதிப்பு உயரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. வதந்திகளால் குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றும். பிள்ளைகளின் வாழ்வில் உங்கள் தனி முயற்சியினால் புதிய திருப்புமுனை உண்டாகும். வருடத்தின் முற்பாதியில் குருபகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் நீங்கள் பிற்பாதியில் பத்தாமிடத்து குருவினால் சிறிது சிரமத்திற்கு ஆளாவீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் சுபகாரியங்களை தள்ளிப்போடாது வருடத்தின் முற்பாதியிலேயே செய்து முடித்துக் கொள்வது நல்லது.
மாணவர்கள் ஞாபக மறதியை வெற்றி கொள்ள தீவிர பயிற்சி தேவை. மாதிரித் தேர்வுகளை எழுதி பார்க்கவும். கூட்டுப் பயிற்சி நல்லது. எழுத்து வேகம் அதிகரிக்கும். இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுத்துறையில் திறமை பெற்றிருப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
பெண்கள் வீட்டு பிரச்னைகளை வெளியே செல்வது கூடாது. தாய்வழி உறவினர்களால் புதிய கலகங்கள் உருவாகக்கூடும். கணவருடன் இணைந்து செயல்பட்டு குடும்ப சலசலப்புகளை களைய முற்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.
தொழில்முறை எதிரிகள் காணாமல் போவார்கள். விவசாயிகள், ஹோட்டல் அதிபர்கள், நகைக்கடை அதிபர்கள் லாபம் அடைவார்கள். பொதுவாக இவ்வருடத்தின் முற்பாதியில் நற்பலன்களையும், பிற்பாதியில் சற்று சிரமமான சூழலையும் எதிர்கொள்ள உள்ளீர்கள். இருப்பினும் உங்கள் வாழ்க்கை தரம் உயர்வடையும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம்: வருடபிறப்பன்று அருகிலுள்ள விநாயகப்பெருமானின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. எந்த ஒரு செயலைத் துவங்கும் முன்பும் விநாயகரை தரிசிப்பது நன்மை தரும். சங்கடஹரசதுர்த்தி விரதம் கடைபிடிக்கலாம். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பது நல்லது.
கும்பம்
2017 புத்தாண்டு உங்கள் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும். வருடம் பிறக்கும் கால நேரத்தைக் கணக்கிடும்போது உங்கள் ராசியில் அமர்ந்திருக்கும் செவ்வாயின் துணையினால் எடுத்த காரியத்தில் தொய்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருவீர்கள். போட்டியாளர்கள் மத்தியில் உங்களின் செயல்வேகம் சிறப்பான வெற்றியை பெற்றுத் தரும். எதிரிகள் காணாமல் போவார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய சம்பாத்யம் அசையா சொத்துக்களாக உருமாற்றம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சென்ற வருடத்தில் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சென்ற நண்பர்களும், உறவினர்களும் மீண்டும் வந்து சேர்வார்கள். நீங்கள் முன்னின்று செய்யும் காரியங்கள் சிறப்பான வெற்றி பெறும். பொதுக்காரியங்களில் உங்களின் செயல்பாடுகளால் கவுரவம் உயரும். விசுவாசமானவர்கள் துணையுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவியாய் இருப்பார்கள். அந்நிய தேசத்தில் வசிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும். கடன்பிரச்னைகள் முற்றிலுமாக குறையும்.
நெடுநாட்களாக இழுபறியில் இருந்த தொகைகள் வசூலாகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். இல்லத்தில் திருமணம், வம்சவிருத்தி போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும், அதிகம் பேசாது அளவோடு பேசினாலும் அர்த்தத்தோடு பேசவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருவீர்கள். உங்களின் வார்த்தைகள் அடுத்தவர்களுக்கு சிறந்த அறிவுரையாக அமையும். உங்கள் ஆலோசனைகள் வெற்றி பெறும். ஆதாயம் தரும் தொலைதூரப் பிரயாண வாய்ப்பு உண்டு. பெற்றோர் உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையின் பெயரில் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. அநாவசிய செலவுகள் முற்றிலுமாகக் குறையும்.
மாணவர்களுக்கு அயராத உழைப்பு அவசியம். கூடுதல் எழுத்து பயிற்சி அவசியம். மருத்துவம், மொழிப்பாடங்கள், ஆசிரியர் பயிற்சி, உடற்கல்வி துறைகளைச் சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்களுக்கு பொறுப்புணர்ச்சி கூடும். குடும்பப் பெரியவர்களிடம் நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வெற்றிக்கு கணவரின் ஆலோசனைகள் பயன் தரும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். நற்பெயர் கிடைக்கும். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம், ஆட்டோ மொபைல்ஸ், பொன், வெள்ளி தொழில் சிறப்பான தனலாபம் காண்பார்கள்.
தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். வருடத்தின் பிற்பாதியில் நற்பெயரையும், புகழையும் சம்பாதிக்கும் உங்களுக்கு முற்பாதியில் ஓய்வில்லாது செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். 2017ம் ஆண்டு உங்களின் வாழ்வினில் மறக்கமுடியாத ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம்: தியான, யோகா பயிற்சிகள் நிம்மதி தரும். புத்தாண்டன்று அருகிலுள்ள அம்பிகையை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் அம்மன் ஆலயத்தில் அகல் விளக்கேற்றி வழிபடவும். நேரம் கிடைக்கும்போது காஞ்சிபுரம் சென்று காமாக்ஷி அம்மனை தரிசிக்க நினைத்த காரியம் கைகூடும்.
மீனம்
2017ம் ஆண்டு உங்களுக்கு நற்பலன்களை தரும். இல்லத்தில் நெடுநாட்களாகத் தடைபட்டு வரும் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். திருமணத்திற்காகவும், புத்திரபாக்கியத்திற்காகவும் காத்திருப்போருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்க்கும் காரியங்கள் தடையேதுமில்லாமல் இனிதே நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அலைச்சல் அதிகரித்தாலும் எடுத்த செயல்கள் வெற்றி பெறும். பிப்ரவரி மாதம் முதல் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். வீடு, மனை, நிலம், ஆகியவை சேரும் நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வருடத்தின் மத்தியில் குடும்பத்தினருடன் தொலைதூர சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. சொத்துகள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். வருடத்தின் பிற்பாதியில் தாயார் வழி உறவினர்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். தாயார் உடல்நிலையில் கவனம் அவசியம். வருடத்தின் பிற்பாதியில் தனித்து பிரயாணிப்பதை தவிர்ப்பது நல்லது.
பிள்ளைகளின் செயல்களால் உங்கள் கவுரவம் உயரும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்த வழக்குப் பிரச்னைகள் விரைவில் முடிவிற்கு வரும். கடன் சுமைகள் குறையத் துவங்கும். நிலுவை பாக்கிகள் வசூலாகும். தன்னம்பிக்கை கூடும். எதையும் திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவு எடுத்து மற்றவர்கள் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். முதியோர்களின் ஆசி கிடைக்கும். ஆன்மிகப் பணிகள், தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்களுக்கு எழுத்து வேகமும், துல்லியமாக விடையளிக்கும் பாங்கும் அதிகரிக்கும். போட்டிகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் முதலிடம் கிடைக்கும். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வின் மூலம் பெருமையடையும் யோகம் உண்டு. சட்ட மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுண்டன்சி, காமர்ஸ், கணித துறைகளில் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்களே வீட்டில் உங்களது விருப்பத்திற்கிணங்க தங்க, வெள்ளிப்பொருட்கள் சேரும். வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.
தொழில், உத்யோகத்தில் வருட துவக்கத்தில் மட்டும் உத்யோக ரீதியாக இடமாற்றம் இருந்தாலும் ஸ்திரத்தன்மை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். மருத்துவ, நீதித்துறையினர், ஆசிரியப் பெருமக்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள்,
வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரமிது. தான தர்ம காரியங்கள் மூலம் மனநிம்மதி கொள்வீர்கள்.
பரிகாரம்: வருடப்பிறப்பு நாளன்று ஐயப்பனை தரிசித்து பக்தர்களுக்கு இயன்ற அன்னதானம் செய்யவும். வியாழன் தோறும் நவக்ரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள்.

No comments:

Powered by Blogger.