பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..300 கி.மீற்றர் அளவிற்கு சுனாமி எச்சரிக்கை? பீதியில் மக்கள்
பிலிப்பைன்சில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் Mindanao என்ற பகுதியில் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதன் அருகே உள்ள இந்தோனிஷியா உட்பட 300 கி.மீற்றர் அளவிற்கு சுனாமி அலைகள் எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த புவியல் ஆய்வாளர்கள் இந்த நிலநடுக்கம் 6.8ரிக்டர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. சுனாமி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
No comments: