Header Ads

Header Ads

சற்று முன் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் வட கொரிய கடலுக்கு சென்றுள்ளது

வட கொரிய கடல் நோக்கி தனது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை, அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் பல யுத்த கப்பல்கள் வட கொரியாவை சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நகர்வு அன் நாட்டை மேலும் எரிச்சலடைய வைத்துள்ளது என்கிறார்கள்.

இது இவ்வாறு இருக்க வரும் திங்கட்கிழமை, ஜப்பான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து வட கொரியாவுக்கு அருகே போர் பயிற்ச்சி ஒன்றில் ஈடுபட உள்ளது. இதனை நடத்த கூடாது என்றும். மீறினால் தாம் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஏற்கனவே வடகொரியா அறிவித்துள்ள நிலையில் , இதனை பொருட்படுத்தாது அமெரிக்கா அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

எனவே திங்கட் கிழமை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பல உலக நாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.