உலகம் முழுவதும் புகழப்படும் பாரிஸ் பியூடிபுல் பாரிஸ்!
பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமும் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் ஆகும். கி.மு.52ல் ரோமர் வரும் வரை பாரிசில் வாழ்ந்து வந்த இனக்குழுவினரை ரோமர் பாரிசீ என அழைத்தனர்.
சுமார் 30 வருடங்களுக்குப்பின், நகரம் லத்தீன் பகுதி என வழங்கும் சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது. இதற்கு பின்னர் பாரிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1852லிருந்து பழைய கட்டடங்கள் உடைக்கப்பட்டன. சாலைகள் அகலமாகின. தெரு விளக்குகளை முதல்முதலில் அறிமுகப்படுத்தியதால் பாரிஸ் விளக்கு நகரம் என்று உலகம் முழுவதும் புகழப்படுகிறது.
ஈபில் கோபுரம்:
உலகத்தின் மிக உயர்ந்த கோபுரம் என்ற புகழுடன் விளங்கிய ஈபில் கோபுரம் முந்நூறு மீட்டர் உயரத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறது.
1889ம் ஆண்டு பாரிசில் நடந்த அகில உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் இன்று பாரிஸ் நகருக்கு மட்டுமல்லாது ஐரோப்பா கண்டத்துக்கே அடையாளமாயிற்று.
இதைக் கட்டியவர் பெயர் கண் டொவ் ஈபில் என்ற புகழ்மிக்கப் பொறியாளர். இதைக் கட்டி முடிக்கப் பன்னிரண்டாயிரம் இரும்புத் துண்டுகளும் எழுபது இலட்சம் ஆணிகளும், இரண்டு ஆண்டுகளும் தேவைப்பட்டிருக்கிறது.
No comments: