Header Ads

Header Ads

பிரிட்டனிடமிருந்து மீண்டும் பிரிய துடிக்கும் ஸ்கொட்லாந்து..!

ஸ்கொட்லாந்து, பிரிட்டனின் ஒரு அங்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது தனி நாடாக பிரிந்து செல்வதற்கு இரண்டாவது தடவையாக வாய்ப்பு கோரி வருகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பிரிட்டனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக செயற்படுவதற்கு கோரிய மக்கள் வாக்கெடுப்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் குறித்த திட்டம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் அந்நாடு மீண்டும் தனித்து செல்வதற்கான கோரிக்கையை முன்வைக்கவே, அந்நாட்டு பாராளுமன்றம் கடந்தவாரம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதோடு, தற்போது மக்களின் பொது வாக்கெடுப்பின் மூலமான அனுமதியை பெற, பிரித்தானிய பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முயற்சித்து வரும் நிலையில், ஸ்கொட்லாந்து தலைவர் நிகோலா ஸ்டர்ஜியன், தனித்து செல்வதற்கான அனுமதியை அந்நாட்டு பிரதமர் தெரேசா மேவிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

 இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கு பிரிட்டன் முயற்சித்துவரும் நிலையில், ஸ்கொட்லாந்து தலைவர் நிகோலா ஸ்டர்ஜியன் தனித்து செயற்படுவதற்கான அனுமதியை கோரும் நிலையில், ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் பட்சத்தில் பிரிட்டன் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடுமென சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.