இலங்கையில் இந்தப் பெண் புதிய சாதனையை
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று நிறைவுபெற்ற 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் அதி சிறந்த மெய்வல்லுநராக வென்னப்புவை திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த வீராங்கனை ஹஷினி பிரபோதா பாலசூரிய தெரிவானார்.
இவ் வருட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 21 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு சாதனைகள் சமப்படுத்தப்பட்டன.
போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினம் மாத்திரம் 7 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி வீராங்கனை சந்திரகுமார் ஹெரினா 3.01 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சங்கவி (2.80 மீ.), எஸ்.தாரணிகா (2.70 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
ஹெரினாவை விட 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த எஸ். பண்டார (40.27 மீ.), 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சரிஷா குணசேகர (11.55 மீ.), 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வென்னப்புவை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த பிரபோதா பாலசூரிய (13.20 மீ.), 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இராணுவத்தைச் சேர்ந்த ஏ.கருணாசிங்க (16.13 மீ.), ஆகியோர் புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.
இது இவ்வாறிருக்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். பிரகாஸ்ராஜ் (25.17 மீ.) தங்கப் பதக்கத்தையும் வை. ஜதார்த்தன் (25.25 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். சுஜீவன் (24.44 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (31.53 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
No comments: