14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம்
பாடசாலை வளாகத்திலுள்ள உள்ள கொய்யா மரத்திலிருந்து கீழே வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள்தெரிவித்தனர்.
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதன்சைட் தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சுப்பிரமணியம் மதுஸான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் எதன்சைட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்விபயிலும் குறித்த மாணவன் நேற்று மாலை ஐந்து மணியளவில் பாடசாலை வளாகத்திலுள்ள கொய்யா மரத்தில் ஏறி பழம் பறிக்கச் சென்றுள்ளார்.
இதன்போது மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நிலையில், படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்பட்டார்.
இந்நிலையில் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையை திம்புலை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: