20 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பிரான்ஸ் இராணுவம்
தீவிரவாதிகளை குறிவைத்து மாலியில் பிரான்ஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலியில் உள்நாட்டு போர் காரணமாக தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், சுமார் 4 ஆயிரம் பிரான்ஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மாலியின் தென்மேற்கு கயோ மகாணத்திலுள்ள போல்சரே வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி தமது அரச எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புர்கினோபாசோ எல்லையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 அரசசார்பு படையினர் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் இராணுவப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: