தாய் மற்றும் 5 மாத கர்ப்பிணி மகள் கொலை
ஹம்பந்தொட்டை – ஹுங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்று காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 10 மணி அளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.
72 வயதான தாயும் அவரது 39 வயதான மகளுமே கொலையுண்டனர்.
கொலையுண்ட மகள் 5 மாத கர்ப்பிணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சடலங்கள் அவர்கள் வசித்து வந்த வீட்டின் மத்திய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலும் வீட்டுக்கு அருகில் இருந்து உரல் ஒன்றும், கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
No comments: