பாகுபலி 600 கோடி வசூல், ஆனால் கையில் காசில்லாமல் தவித்த பிரபாஸ்..
பாகுபலி படத்தின் முதல் பாகம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்தது. படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் பாகுபலி முதல் பாகத்திற்கு பிரபாஸ் பெற்ற சம்பளம் 20 கோடி ரூபாய் மட்டுமே. தொடர்ந்து வேறு எந்த படங்களையும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இதில் மட்டுமே 5 வருடம் இருந்ததால் ஒரு சமயத்தில் பணகஷ்டம் வந்துவிட்டதாம்.
அதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில தயாரிப்பாளர்கள் அவர் கால்ஷீட் வாங்க பணத்தோடு தொடர்ந்து அவர் வீட்டில் வந்து நின்றார்களாம். சிலர் உதவியாக வைத்து கொள்ளுங்கள் என கூட கூறினார்களாம்.
"இப்போது என்ன செய்ய?" என ராஜமௌலியை போன் செய்து கேட்க, 'அவர்களிடம் கடனாக வாங்கிகொள், படத்தில் நடிப்பேன் என வாக்குறுதி கொடுக்கவேண்டாம், பின்னர் அவர்களுக்கு திருப்பி கொடுத்துவிடு' என அட்வைஸ் கூறினாராம். அதை இயக்குனர் ராஜமௌலி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
10 கோடி ரூபாய்க்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட பாகுபலிக்காக ஏற்க மறுத்துவிட்ட பிரபாஸின் அர்ப்பணிப்பு தன்னை வியக்கவைத்ததாக ராஜமௌலி மேலும் கூறியுள்ளார்.
No comments: