விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
இளையதளபதி விஜய்க்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். அவர் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவருகிறார்.
ஸ்பைடர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் ஜூலை மாதமே வரும் என கூறப்பட்ட நிலையில் பின்னர் தள்ளிப்போனது. அது அக்டோபர் மாதம் தீபாவளி விடுமுறைக்காக வெளியாகும் என தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் அதே நாளில் தமிழிலும் வெளியாகும்.
அதே நாளில் தான் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்61 படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது. அட்லீ இயக்கிவரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
முருகதாஸ் படமும், விஜய் படமும் ஒரே நாளில் வந்தால் நிச்சயம் இருவருக்கும் வசூலில் பதிப்பிக்கும் என்பது நிச்சயம்.
No comments: