பிரித்தானியா அரண்மனையிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடின்பர்க்கின் கோமகனான இளவரசர் பிலிப் கிரேக்க நாட்டில் 1921ம் ஆண்டு ஜீன் 10ம் திகதி பிறந்தார்.
இவருக்கும் இரண்டாம் எலிசபெத்துக்கும் கடந்த 1947ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதி திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இளவரசர் சார்லஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆன்ட்ரூ, இளவரசர் எட்வெர்ட் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
பிரித்தானியா அரச பரம்பரையிலேயே அதிகநாட்கள் வாழ்ந்த ஆண்மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆன இளவரசர் பிலிப், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் எவ்விதமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் பிலிப்பின் உடல்நிலை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
No comments: