பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் எட்டு வயது குழந்தை Saffie Roussos, 18-வயதுடைய Georgina Callander மற்றும் 26-வயதுடைய John Atkinson ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதலால் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் அப்பகுதியில் உள்ள அதாவது மான்செஸ்டரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Salman Abedi என்று தெரியவந்துள்ளது. இவர் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
இவரது குடும்பம் லிபியாவைச் சேர்ந்தது. அங்கிருந்து அகதியாக வந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர்.
Salman Abedi-க்கு பிரித்தானிய குடியுரிமை உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மூன்று பேர் உடன் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் இரண்டு பேர் சகோதரர்கள் மற்றும் ஒருவர் சகோதரி என்று தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் Salman Abedi அந்த வீதியில் இஸ்லாமிய சம்பந்தமான வார்த்தைகளை கத்திய படியே சென்றதாக, அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே இஸ்லாமிய உடைகளை அணிந்த படியே சென்றதாகவும் கூறப்படுகிறது.
Salman Abedi, Know Your Chemicals-என்ற புத்தகத்தை வாங்கி படித்துள்ளார் என்றும் அவரது சகோதரர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அவரை தீவிரவாதிகள் ஏதேனும் காரணங்களை கூறி, மனதை மாற்றியிருக்கலாம், அல்லது இவருக்கு ஏற்கனவே தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் அவர் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது Salman Abedi-யின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் Salman Abedi தாக்குதல் நடத்திய போது சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவிற்கு இது தான் ஆரம்பம், புனிதப்போர் தொடங்கிவிட்டது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: