உலக மக்களை உறைய வைத்த காதல் ஜோடி
கப்பலில் வைத்து திருமணம், விமானத்தில் திருமணம், மலைப்பகுதியில் திருமணம் என பல்வேறு விதமான வகையில் திருமணம் நடத்தி அற்புதமான அனுபவத்தை தங்கள் வாழ்நாளில் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
அப்படி ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர்.
10 டிகிரி செல்ஸியஸ் குளிரில், மேகங்களுக்கு மிக அருகில், எவரெஸ்ட் சிகரத்தில் வைத்து தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் ஜேம்ஸ்.
எவரெஸ்ட் சிகரத்தின் ’base camp’-ஐ அடைய ஒரு வாரம் ஆகியுள்ளது. இந்த ஒரு வாரத்துக்காக ஜேம்ஸ், ஆஷ்லே ஓராண்டு பயிற்சி மேற்கொண்டனராம்.
மலையேறும்போது ஜேம்ஸுக்குப் பல தடவை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இந்தத் திட்டத்தைக் கைவிடும் சூழலுக்குக்கூட தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், தன்னம்பிக்கையுடன் பேஸ் காம்ப்பை அடைந்து, அங்கு திருமணம் செய்து கொண்டனர்.
நடுங்கும் குளிரில், திருமண ஆடை அணிகலன்களுடன் அசத்தல் போட்டோஷூட் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தை பார்க்கும் உலக மக்களும் உறைந்த போவார்கள்.
அந்த அளவுக்கு புகைப்படங்கள் அழகாக உள்ளது. எங்கள் திருமணத்தில் பாதிரியார் இல்லை, உறவினர்கள் இல்லை.மேகங்கள் மத்தியில் என் காதலியின் கரம்பிடித்துள்ளேன். இயற்கையின் மடியில் நடந்துள்ளது எங்கள் திருமணம் என்று நெகிழ்ந்துள்ளார் ஜேம்ஸ்.
No comments: