Header Ads

Header Ads

நாங்கள் அமெரிக்காவிற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: வட கொரியா

வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது என அந்நாட்டின் தூதரக அதிகாரி Choe Il தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார். இதுவரை 6 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட 6 வது சிறிய ரக ஏவுகணையானது வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், மீண்டும் இதனை தொடர இருப்பதாக வடகொரியாவின் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலிருந்து வரும் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், நாங்கள் இதற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். அடுத்த ஏவுகணை தயாராக உள்ளது. அதிபரின் உத்தரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என அணு ஆயுத அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவ படைகளை தாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது அணு ஆயுத வசதிகளை முன்னேற்றப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எங்கள் நாடு மற்றும் நாட்டு மக்கள் மீது அமெரிக்கா எந்த வகை தாக்குதல் நடத்தினாலும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என தூதரக அதிகாரி கூறியுள்ளார்

No comments:

Powered by Blogger.