மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான்
சர்வேதச நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் கூட அவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
ஃபிஜி
உலகளவில் எவ்வித செயற்கையான ஆபத்துக்களை சந்திக்காமல் பாதுகாப்பான நாடு ஒன்று உள்ளது என்றால் அது பசுபிக் பெருங்கடல் மத்தியில் உள்ள ஃபிஜி என்ற தீவு நாடு தான். சுமார் 9 லட்சம் மக்கள் தொகையை மட்டும் கொண்டுள்ள இந்த நாட்டிற்குள் வெளிநாட்டினர்கள் எளிதில் நுழைய முடியாது.
குறிப்பாக, வல்லரசு மற்றும் அண்டை நாடுகளையும் கவரும் வகையில் இந்நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாததால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் இந்நாடு பாதுகாப்பாகவே இருக்கும்.
அயர்லாந்து
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து மிகவும் இயற்கை வளமிக்க வளர்ந்த நாடாகும். அயர்லாந்து நாட்டிற்கும் பிற வல்லரசு நாடுகளுக்கும் எவ்வித உடன்படிக்கையும் இல்லை என்பதால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் அயர்லாந்து பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.
அயர்லாந்து நாட்டின் சட்டப்படி, வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றால் ஐ.நா சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மால்டா
மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள இந்த குட்டி தீவு நாடு இன்று வரை வரலாற்றில் மறக்கமுடியாத இடத்தை பெற்று வருகிறது. மன்னராட்சி நடைபெற்ற காலம் முதல் மால்டா நாட்டை கைப்பற்ற பல அரசர்கள் முயன்று தோற்று தான் போனார்கள்.
இந்த தீவு நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொருட்செலவு ஏற்படுவது மட்டுமின்றி, இந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பது அனைத்து நாடுகளும் அறிந்த ஒரு விடயம்.
டென்மார்க்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்குள் போர் நிகழ்ந்தால் மட்டும் டென்மார்க் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்குள் போர் மூண்டால் அது எவ்விதத்திலும் டென்மார்க்கை பாதிக்காது.
ஐஸ்லாந்து
சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் அமைதியை மட்டுமே விரும்பும் ஒரு நாடு இருக்கிறது என்றால் அது ஐஸ்லாந்து தான். 2016-ம் ஆண்டு அமைதியை விரும்பும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து எல்லைகளை சுற்றி கடற்பரப்பு மட்டுமே உள்ளதால் பிற நாடுகளுடன் எல்லை பிரச்சனை நிகழ வாய்ப்பில்லை. இதுமட்டுமில்லாமல் கடற்பரப்பை தாண்டி மலை முகடுகள் இருப்பதால் ஐஸ்லாந்து மீது எளிதில் படையெடுக்க முடியாது.
சிலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு மிகவும் வளமிக்க நடுநிலைமை கொண்ட நாடாகும். தென் அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் மனித வள மேம்பாட்டில் சிலி தான் முதலிடம் வகிக்கிறது. சிலி நாட்டை சுற்றிலும் ஆண்டிஸ் மலைத்தொடர்கள் இருப்பதால் போர் நிகழ்ந்தால் சிலி நாடு எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.
பூட்டான்
உலகிலேயே உயரமான மலையான இமயமலை தொடரில் பூட்டான் அமைந்துள்ளதால் இது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான நாடாகும். 1971-ம் ஆண்டு முதல் ஐ.நா சபையின் உறுப்பினராக பங்கேற்றதால் சுவிட்சர்லாந்து நாட்டை போல் பூட்டான் அமைதியை விரும்பும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து
உலகிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த அதேசமயம் தனிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக திகழ்வதில் நியூசிலாந்து நாடு முதல் இடம் வகிக்கிறது. நியூசிலாந்து நாட்டில் நிலையான ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதால் வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நியூசிலாந்து தவிர்த்து வருகிறது.
பூட்டான், சுவிட்சலாந்து போல் நியூசிலாந்து சுற்றிலும் மலைத்தொடர் இருப்பதால் இந்நாட்டின் மீது எளிதில் போர் தொடுக்க முடியாது.
துவாலு
ஃபிஜி நாட்டை போல் துவாலு நாடும் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். மிகவும் தனிப்படுத்தப்பட்டு உள்ளதால் இதன் அரசியலமைப்பு சட்டங்கள் வெளிவிவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதி அளிப்பது இல்லை.
இந்நாட்டில் இயற்கை வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதால் இந்நாட்டின் மீது போர் தொடுக்க வல்லரசு நாடுகள் விரும்புவதில்லை.
குறிப்பாக, இந்நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை இவர்களே உற்பத்தி செய்துக்கொள்வதால் வெளிநாடுகளின் உதவி பெரும்பாலும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலங்களிலும் சுவிட்சர்லாந்து நாடு அமைதியை விரும்பி நடுநிலையை மட்டுமே வகித்து வந்தது.
சுவிஸ் முழுவதும் எண்ணற்ற பதுங்கு குழிகளும் வலிமையான ராணுவமும் இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் இந்நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காது.
அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்தியில் போர் நிகழ்ந்தாலும் கூட சுவிஸ் சுற்றியுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஒரு வலிமையான பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: