வவுனியாவில் கொரோனாவை பரப்ப பாஸ்டர் திட்டம்; அதிரடியாக நுழைந்து பிடித்த பொலிஸ்!
வவுனியா வெங்கலச்செட்டிகுளம் முதலியார் குளத்தில் உள்ள வீடொன்றில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தின் போது பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் என்றும் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் என்ற அச்சத்திலும் இலங்கை மக்கள் வீடுகளில் தனிமை படுத்தலில் இருந்து வரும் நிலையில் இப்படியான சம்பவங்களும் அங்காங்கே இடம்பெற்று தான் வருகிறது என்பது பலரின் மத்தியிலும் விசனங்களை உண்டு செய்துள்ளது.
குறித்த பாஸ்ரரிடம் கடந்த ஒரு சில தினங்களுக்கே முன்பே பலர் அறிவுறுத்தல் வழங்கியும் மத போதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து செட்டிகுளம் பொலிஸார் குறித்த பாஸ்ரர் மற்றும் 15 பேர்களை கைது செய்துள்ளனர் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: