யாழ் மாணவனின் காதல் வேட்கை!! அக்கா, தங்கை கர்ப்பம்!
யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் காதல் மோகத்தில் அக்காவும் தங்கையுமாக இருவர் கர்ப்பமாகியுள்ளனர்.
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தான் தங்கியிருந்த வீட்டுக்கு அயலில் உள்ள குடும்பம் ஒன்றின் பிள்ளைகள் 3 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.
இந் நிலையில் அம் மாணவன் மூத்த பெண் பிள்ளையைக் காதலித்து வந்ததாகவும் குறித்த யுவதி கடந்த வருடம் ஏ.எல் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாககூடிய புள்ளிகள் பெற்றதாகவும் தெரியவருகின்றது.
அந்த யுவதியும் அந்த யுவதியின் தங்கையான 18 வயதான பிரபல மகளீர் கல்லூரி மாணவியும் வயிற்றுக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற முற்பட்ட போதே இருவரும் கர்ப்பமடைந்த தகவல் குறித்த மாணவிகளின் தாயாருக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழக மாணவன் தலைமறைவாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
கர்ப்பமடைந்த அக்காவும் தங்கையும் தங்களது வீட்டில் கடும் சண்டையிட்டு அக்கா தூக்கில் தொங்க முற்பட்ட போது விடயம் அயலவர்களுக்கு தெரியந்ததுள்ளது
No comments: