Header Ads

Header Ads

ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்வேன்: கதறி அழுத சபீதா ராய்

இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன் என நடிகை சபீதா ராய் தெரிவித்துள்ளார். 

வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் அந்த தொடரை ஒளிபரப்பும் நிறுவன மேலாளர் சுகுமாறனுடன் நள்ளிரவில் சண்டை போட்ட வீடியோ வெளியானது. சபீதா சுகுமாறனுடன் அவர் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்ததாக செய்தி வெளியானது. 

இந்நிலையில் இது குறித்து அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதில் சில,

சம்பவம் 
அனைவருக்கும் வணக்கம். இதுவரைக்கும் நடந்த சம்பவத்தை பற்றியோ இல்லை அதை பற்றிய விளக்கங்கள் பற்றியோ எதை பற்றியும் நான் பேச வரவில்லை.

தெரியும் 
நடந்த விஷயம் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த சம்பவத்தை அடுத்து நீ ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய எந்த சமூக வலைதளத்திற்கும் நீ போகக் கூடாது என்றார்கள் என் அம்மா.

அம்மா 
ஏன் அம்மா அப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு போகக் கூடாது என்றால் போகக் கூடாது தான். நான் சமூக வலைதளத்திற்கு போகவில்லை என்றால் நடந்த சம்பவம் உண்மை என்று நினைத்துக் கொள்வார்கள்.

நடிகை 
இது ஒரு சாதாரண பொண்ணுக்கு நடந்திருந்தால் யாரும் நியூஸ் போட்டிருக்க மாட்டாங்க. நான் ஒரு நடிகை என்பதால் நியூஸ் வந்துடுச்சு. என் அம்மாவுக்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் லைவில் வந்துள்ளேன்.

மானமுள்ள பெண் 
ஒரு மானமுள்ள எந்த பெண்ணாக இருந்தாலும் அந்த செய்தி வெளியான அன்றே தற்கொலை செய்து செத்திருப்பாள். நீ ஏன் இன்னும் சாகலை என்று கேட்கிறீங்களா, சொல்கிறேன்.

குழந்தை 
63 வயதில் அம்மா என்கிற குழந்தை என்னை நம்பி இருக்கிறார்கள். அவர்களை பார்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளேன். போடுற நியூஸுக்காக நான் செத்துவிட்டால் என் அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அதனால் நான் சாகவில்லை. தற்கொலைக்கு எதிரானவள் நான்.

வீடியோ 
அந்த வீடியோவில் பார்த்தது நான் தான், சண்டை போட்டது நான் தான், அது நான் தான், அந்த வாய்ஸ் என்னுடையது தான். அந்த வீடியோவை சித்தரித்து போட்டுள்ள நியூஸ் நியாயமா, உண்மை சம்பவமாக தெரியுதா?

ஆதாரம் 
இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன்.


No comments:

Powered by Blogger.