வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலம்
வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதீப் (வயது 25) என்ற இளைஞன் வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.
நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாயார் எழுந்து வீட்டின் வெளியே வந்த போது வீட்டின் முன்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணத்திற்கான காரணம் என்ன என்பதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: